பாரா பாட்மின்டன்
பாரா பாட்மின்டன்  
விளையாட்டு

ஜப்பான் உலக பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்!

கல்கி டெஸ்க்

உலக பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி, மன்தீப் கவுர், பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஜப்பானில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், இங்கி லாந்தின் வில்லியம் ஸ்மித் மோதினர். அபாரமாக ஆடிய பிரமோத் 21-5, 21-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

உலக பாரா பாட்மின்டன்

மற்ற 'எஸ்.எல். 3' பிரிவு போட்டிகளில் இந்தியாவின் நிதேஷ் குமார், மனோஜ் சர்க்கார் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், தென் கொரியாவின் டேசங்லீ மோதினர். இதில் கிருஷ்ணா நாகர் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிவராஜன் சோலைமலை வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு போட்டியில் இந்தியாவின் சுகந்த் கடம் 21-2, 21-4 உகாண்டாவின் ஹசன் முபிருவை வீழ்த்தினார்.

உலக பாரா பாட்மின்டன்

பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி 21-6, 21-4 என பிரான்சின் கேத்தரினை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பருல் பார்மர் 21-6, 21-9 என பல்கேரியாவின் இமோனா இவானோவாவை வென்றார். இந்தியாவின் மன்தீப் கவுர் 21-1, 21-6 என, உகாண்டாவின் ரோஸ் நான்செரே கோவை வீழ்த்தினார்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT