விளையாட்டு

ஒரே நாளில் 5 பதக்கங்கள்: காமன்வெல்த் கேம்ஸில் இந்தியா சாதனை! 

கல்கி

பிரிட்டன், பர்மிங்ஹாம் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை பெற்றுள்ளது. 

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது; 

காமன்வெல்த் போட்டியில் நேற்று ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த துளிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான பளுதூக்குதலின் 109 கிலோ எடைப் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் மொத்தம் 355 கிலோ எடையைத் தூக்கி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் 

அதேபோல் ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஆண்களுக்கான (109+ கிலோ எடைப் பிரிவு) பளுதூக்குதலில் இந்திய வீரர் குர்தீப் சிங் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார். நேற்று இந்தியா ஒரு வெள்ளி , 4 வெண்கலம் வென்றது. காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் உள்ளது 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT