விளையாட்டு

ஆசிய வாலிபால் போட்டி; இந்தியாவுக்கு வெண்கலம்! 

கல்கி

டெஹ்ரானில் நடைபெற்ற 14-வது ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் வாலிபால் விளையாட்டுத் தொடரில் இந்திய ஆடவர் அணி தென் கொரியாவை 3-2 என்று வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. 

இதற்கு முன்னதாக தென் கொரியாவில்  1999-ம் ஆண்டு நடந்த ஆசிய வாலிபால் போட்டித் தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம்  வென்றது. பின்னர் 2003-ல் இதே தொடரில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி. அதன் பிறகு 2005 முதல் 2008- ம் ஆண்டு வரை இந்தியா இதே தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளி வென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று டெஹ்ரானில் நடந்த போட்டியில்  இந்திய அணியின் வீரர்களான குஷ் சிங், துர்வில் படேல், சேகர் துரன், கபிலன், ஆர்யன், லைபிரோ, யமன் காதிக் ஆகியோர் அபாரமாக ஆடி, இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க செய்தனர். இந்நிலையில், இந்திய அணி யு-19 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத் தக்கது. 

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT