கபில்தேவ் 
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியை விளாசினார் கபில்தேவ்!

ஜெ.ராகவன்

கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்றால் இந்திய அணிக்காக விளையாட வராதீர்கள் என்று இந்திய அணி முன்னாள் காப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் தலைமைவகித்த போதுதான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ஆல்ரவுண்டரான அவர், கிரிக்கெட் தொடர்பாக அவ்வப்போது ஏதாவது ஒரு கருத்தை முன்வைப்பது வழக்கம். அதற்கு ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கருத்துகளை கூறிவருகிறார்.

இன்று ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் பலர், இந்திய அணிக்காக விளையாடும் போது ஏற்படும் மன அழுத்தத்தை அவர்களால் தாங்க முடியவில்லை என்று கூறிவருகின்றனர். இது கவலைக்கு இடமாக உள்ளது. கிரிக்கெட் ஆட்டம் பற்றிய கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆட வேண்டும். ஆர்வம் இல்லாமல் விளையாட வரக்கூடாது. மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது என்றால் கிரிக்கெட் விளையாட வராதீர்கள்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நீங்கள் இந்திய அணிக்காக விளையாடுகிறீர்கள். அப்படியிருக்கும்போது பொறுப்புடன் விளையாட வேண்டும். சரியாக விளையாடத்தற்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லக்கூடாது. மன அழுத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

'நாங்கள் ஐ.பி.எல் போட்டியில் விளையாடுகிறோம். எங்களுக்கு நிர்பந்தம் அதிகம் உள்ளது' என்று வீரர்கள் சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இது சரியா? இப்படி பேசுபவர்கள் ஏன் விளையாட வரவேண்டும். நீங்கள் நன்றாக விளையாடினால் ரசிகர்கள் உங்களை ஆதரிப்பார்கள். இல்லையென்றால் தூற்றுவார்கள். இதற்கெல்லாம் பயந்தால் கிரிக்கெட் ஆட முடியாது.

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடும் உங்களுக்கு என்ன நிர்பந்தம்? இந்திய அணிக்காக விளையாடுவது பெருமை இல்லையா?

உங்களை யார் நிர்பந்தப்படுத்துகிறார்கள். விளையாட விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கிவிடுங்கள். ஏதாவது வாழைப்பழம் அல்லது முட்டை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சற்று கடினமாகவே தெரிவித்துள்ளார்.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT