விளையாட்டு

இளநீரின் பயன்களை பார்க்கலாம்!

மகாலட்சுமி சுப்பிரமணியன்

சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிய பானமெனில் அது இளநீர் தான். இளநீரில் பல வகைகள் உள்ளன.பச்சை இளநீர், செவ்விளநீர்,அடுக்கு இளநீர் ,மஞ்சள் கச்சி இளநீர் எனபல வகைகளில் பலனளிக்கும். அனைவருக்கும் ஏற்ற சத்து மிக்க பானம் இளநீர் என்றால் மிகையில்லை.

இவற்றில் எண்ணற்ற எலக்ட்ரோ லைட்கள் உள்ளதால் குடித்ததும் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை உடனே வழங்குகிறது.சோர்வை நீக்கி நாள்முழுவதும் எனர்ஜியோடு இருக்க தேவையான சக்தியை கொடுக்கிறது.

மிக குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்காது, உடலுக்கு தேவையான சத்துக்களை கிடைக்கச் செய்கிறது.இளநீரில் அதிக அளவு கால்சியம்,பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனால் உடல் வறட்சியை, நாவறட்சியை போக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும்.

இளநீரை அடிக்கடி குடிப்பதால்உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.வெயிற்காலங்களில் இளநீரை அருந்துவதால் அதிக தாகம் அடங்குவதுடன் சிறுநீரக பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது . உடற்பயிற்சி செய்தவுடன் இளநீரை அருந்துவதால் அதிக வியர்வை, நீர்ச்சத்து இழப்பை சரிசெய்கிறது.

சாப்பிடுவதற்கு முன் இளநீர் அருந்துவது அஜீரணம் பிரச்சனைகளை தடுக்கும்.வாயுத் தொல்லை,வயிற்று உப்புசம் போன்றவை வராமல் தடுக்கும்.இளநீர் அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.இதயதுடிப்பு சீராகும்,இதனால் நிம்மதியான தூக்கம் வரும் .

இளநீர் அருந்துவது மலச்சிக்கலை நீக்கும் . நெஞ்செரிச்சல், அசிடிட்டி வராமல் பாதுகாக்கிறது.சிறுநீர் பாதை தொற்றுக்கள்,சிறுநீர்க்கடுப்பு,உடல் உஷ்ணம் ஆவது போன்ற கோடை கால நோய்கள் வராமல் தடுக்கிறது.

கர்ப்பகாலத்தில் பெண்கள் இளநீரை அருந்துவதால் ஊட்டச்சத்து, தாதுக்கள் குறைவின்றி கிடைக்கும்.சிசுவின் ஆரோக்யத்துடன் பாதுகாக்கும்.பச்சை இளநீரை அருந்துவதால் தோல் நோய்கள்,கண் நோய்கள் தீரும்.செவ்விளநீரை அருந்துவதால் பித்தம்,உடல்சூடுபோக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க உதவி புரிகிறது.இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை விரைவில் வராமல் தடுக்கிறது.

மொத்தத்தில் இளநீர் என்பது இயற்கையின் பல நன்மைகளை கொண்ட சிறந்த பானம்.இந்த கோடையில் தினமும் அருந்தி ஆரோக்கியமாக இருப்போம்.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான் அருளும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தெரியுமா?

மாணவர்களுக்கான சிறந்த 6 AI கருவிகள்!

Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

SCROLL FOR NEXT