ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், அதிக கிராண்ட் ஸ்டாம் பட்டங்களை (22) வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். (22 vs 22)
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில், கிரீஸ் வீரர் ஸ்டெபளோஸ் சிட்சிபாஸ் (5ஆவது ரேங்க், 24 வயது) உடன் சேர்ந்து மோதிய 35 வயது ஆகிய ஜோகோவிச் (4ஆவது ரேங்க்) 6 – 5; 7 – 4; 7 – 6 என்கிற நேர்செட்களில் வென்று 10ஆவது முறையாக ஆஸி ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார்.
2 மணி நேரம் 56 நிமிடங்கள் கடுமையான விளையாட்டு, பார்க்க பரபரப்பாக இருந்தது.
முதல் பரிசாக ` 26.5 கோடி இவருக்கு வழங்கப்பட்டது.
ஏ.டி.பி. ஒற்றையர் தர வரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தைக் கைப்பற்றினார் ஜோகோவிச்.
முதன்முறையாக:
ஆஸி ஓபனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபெலன்கா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எலா ரைபாகினாவுடன் விளையாடிய சபலென்கா (24 வயது; 5ஆவது ரேங்க்) முதல் செட்டில் 4 – 6 என்று எடுத்துப் பின்தங்கிய போதும் அடுத்தடுத்து விளையாடிய இரு செட்களிலும் அபாரமாக விளையாடி 6 – 3; 6 – 4 என்று எடுத்து கோப்பையை வென்று முதல் பரிசாக ` 26.5 கோடியைத் தட்டிச்சென்றார்.