விளையாட்டு

பொட்டுக்கடலை மாவின் பற்பல பயன்கள்

எஸ்.ராஜம்

பொட்டுக்கடலையை பொரியுடன் சாப்பிடலாம், சட்னி அரைக்கலாம். அதை பொடித்து வைத்துக் கொண்டால் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பொறியல்களில் உப்போ, காரமோ கூடிவிட்டால் இந்த பொடியைத் தூவி சரி செய்யலாம்.

குழம்பு நீர்த்து விட்டால் பொட்டுக்கடலை பொடியை கரைத்துக் கலந்தால் கெட்டியாகிவிடும்.

பொட்டுக்கடலை பொடியுடன், உப்பு, மிளகாய்த்தூள் கலந்து, தாளித்து டிபனுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பொட்டுக்கடலை பொடியை பாலில் கரைத்து தேவைக்கேற்ப சர்க்கரை, முந்திரி, ஏலப்பொடி சேர்த்து கொதிக்க வைத்தால், திடீர் பாயாசம் ரெடி.

பொட்டுக்கடலை மாவை சூப் கொதிக்கும் போது நீரில் கரைத்து சேர்த்தால் சூப் திக்காக வரும்.

குருமா, கிரேவி, கூட்டு இவற்றில் நீர் அதிகமாகி விட்டால் சிறிது இந்த மாவை சேர்த்தால் பதமாகிவிடும்.

வெந்த காய்களில் பொட்டுக்கடலை மாவை பிசிறிவிட்டால் பருப்பு உசிலி போல சுவையாக இருக்கும்.

பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய் துருவல் பேரிச்சம்பழம் கலந்து விட்டால் சத்து நிறைந்த சுவையான இனிப்பு தயார்.

பஜ்ஜி மாவு தயாரிக்கும் போது கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா 1/2 கப் என்ற விகிதத்தில் கலந்தால், பஜ்ஜி மொறுமொறுப்பாக வரும்.

பொட்டுக்கடலை மாவில் சூடான நெய், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரிப் பருப்பு கலந்து, லட்டு பிடிக்கலாம்.

இட்லி மிளகாய் பொடி காரம் அதிகம் என்று தெரிந்தால் இந்த பொடியை சிறிது கலந்தால் காரம் குறைந்து, சுவை கூடும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT