ICC trophy 
விளையாட்டு

சாம்பியன்ஷிப் தொடரை ஹைப்ரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!

பாரதி

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஷிப் தொடரை ஹைப்ரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட்  வாரியம் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.

இந்தமுறை ஐசிசி சாம்பியன் ட்ராபி போட்டிகளை எடுத்து நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகள் நடத்தும் மைதானத்திற்கான இடங்களை இறுதி செய்து வருகிறது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும். கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதனால், இனி வரும் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா இங்கு வரவில்லை என்றால், இந்தியா இல்லாமலேயே தொடரை நடத்துவோம் என்று கூறியது.

2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு நாங்கள் வந்ததுபோல், சாம்பியன்ஷிப் தொடருக்காக நீங்கள் வந்துதான் ஆக  வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

இந்தநிலையில்தான் ஜெய் ஷா ஐசிசியின் தலைவராக பதவியேற்றார்.

இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இந்திய அரசும் அனுமதிக்காத நிலையில், ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வேறு வழியே இல்லை. இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு ஒரு நாட்டில் நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி போட்டி லாகூரில் நடத்தத் திட்டமிடப்பட்டன. ஆனால், இந்திய அணி இறுதிபோட்டியில் தகுதிப்பெற்றால், லாகூரில் நடத்தக்கூடாது என்றும், வேறு நாட்டில் மாற்ற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இறுதி போட்டி மட்டும் துபாய் அல்லது சிங்கப்பூரில் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையே வேறு நாட்டுக்கு மாற்றி விடுவோம் என ஐசிசி மிரட்டியதாகவும், இதனால் வரும் வரை லாபம் என நினைத்து பாகிஸ்தான் இதற்கு அடிப்பணிந்ததாகவும் கிரிக்கெட் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT