விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி; தோல்வியுற்ற பெல்ஜியத்தில் கலவரம்!

கல்கி டெஸ்க்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் பெல்ஜியம் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் மொராக்கோவிடம் பெல்ஜியம் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. குரூப் எஃப் பிரிவு போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தோல்வியைத் தாங்க இயலாமல் பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில்  கலவரம் வெடித்தது. இதில் கார், பஒக் ஆகிய வாகனங்கல் தீக்கிரையாகின. உடனே போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, பலரைக் கைது செய்தனர்.

இந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ப்ரூசல்ஸ் மேயர் ஃபிலிஃப் க்ளோஸ் உத்தரவிட்டுள்ளார். கலவரத்தை கட்டுக்குள் வைக்க தேவைப்பட்டால் சப்வேக்கள் மூடப்படலாம்.

ட்ராம் போக்குவரத்தும் நிறுத்தப்படலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2 போலீஸாரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT