KL Rahul. 
விளையாட்டு

"கேப்டவுன் ஆடுகளத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை" - கே.எல்.ராகுல்!

ஜெ.ராகவன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என டிரா செய்தபோதிலும் கேப்டவுன் ஆடுகளத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி, கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக பந்து வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை 176 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு சுருண்டது.

குறைந்த ஓவர்கள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டி இதுவாகத்தான் இருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1932 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த போட்டியில் இதேபோல் நடந்தது. 

 கேப்டவுனில் இந்தியா முதன் முறையாக வென்றுள்ளது. இது எனக்கு மூன்றாவது தொடராகும். ஒவ்வொரு முறை நாங்கள் இங்கு வரும்போதும் துடிப்பாகத்தான் விளையாடுவோம். ஆனால், போட்டியி தோல்வியில்தான் முடியும். ஆனால், இந்த முறை நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். உண்மையில் சொல்லப்போனால் இந்த ஆடுகளத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதுதான் டாஸ் போட்டார்போல் இருந்தது, ஆனால் அதற்குள் டெஸ்ட் போட்டியே முடிந்துவிட்டது என்றார் ராகுல்.

செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  டெஸ்டில் ரோஹித் தலைமையிலான இந்தியா தோல்வியுற்றபோது இந்தியா போதுமான அளவு தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பது போல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்தார்.

நாங்கள் திறமையை வெளிப்படுத்தித்தான் விளையாடினோம். சில சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி என்பது சகஜம்தான். அதாவது எதிரணியினர் திடீரென அதிரடி காட்டும்போது இப்படி ஏற்படும். இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் போட்டிகளில் நாம் வென்றுள்ளோம்.

கேப்டவுன் போட்டி எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த்து. டெஸ்ட் கிரிக்கெட்டை நாங்கள் ரசிக்கிறோம். நம்நாட்டிற்காக விளையாடுவதை மதிக்கிறோம். இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் போட்டி வெற்றிகள் நமக்கு முக்கியம் என்றார் ராகுல்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT