இந்தியா vs வங்கதேச அணி 
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்! இந்தியா vs வங்கதேச போட்டி மழையினால் பாதிப்பு!

கல்கி டெஸ்க்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4வது சுற்று போட்டியில் இந்திய, வங்கதேச அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து, விராட் கோலி இறங்கினார். விராட் கோலி, கே.எல்.ராகுல் இணை பொறுப்பாக நிதானமாக விளையாடியது.

வங்கதேச அணி

கே.எல். ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

தற்போது வங்கதேச அணி 7 ஓவரில் 66 ரன்கள் விக்கெட் இழப்புகள் ஏதும் இன்றி விளையாடி வருகிறது இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம். தற்போது மழையினால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT