விளையாட்டு

அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் ஆபத்து!

இந்திராணி தங்கவேல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களான சாதாரண நிறுவனங்களின் தயாரிப்புகள்,   ஃபேஷியல் க்ரீம்கள், லிப்ஸ்டிக், ஹெர்பல் பொருட்கள், பிரபல சர்வதேச பிராண்ட்கள் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதாக கணிப்புகள் கூறுகின்றன. 

பொதுவாக லிப்ஸ்டிக்குகளில் நிறத்துக்காக ஒன்று, ஈரப் பதத்துக்காக ஒன்று என பல காரணங்களுக்காக ஆறு முதல் எட்டு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவையெல்லாம் கலக்கும்போது அபாயகரமான விளைவுகள் ஏற்படுகின்றன .

பரிசோதிக்கப்பட்ட 30 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் 13 ஐட்டங்களில் நிக்கல் என்ற உலோகம் அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதுவும் அலர்ஜி, புற்றுநோய் என பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. 50 சதவீத லிப்ஸ்டிக்குகளில் குரோமியம் அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

நமது தோலில் பூசப்படும் எந்த கிரீம் அல்லது மருந்தில் இருக்கும் வேதிப்பொருட்களும் 60% அளவுக்கு நமது உடலுக்குள் உறிஞ்சப்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் தங்களது தோல் மூலம் உடலுக்குள் ஆண்டுக்கு 2 கிலோ வேதிப்பொருட்களை உறிஞ்சுவதாக கணிப்புகள் சொல்கின்றன .இதனால் அலர்ஜியில் ஆரம்பித்து ஏராளமான பிரச்சனைகள் எழுகின்றன. 

நிலம், நீர், காற்று என எல்லாமே வேதிப்பொருட்கள் கலந்து மாசுபட்டிருக்கும் சூழலில், சில வேதிப்  பொருட்கள் நம் உடலுக்குள் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தான் 'அனுமதிக்கப்பட்ட அளவு 'என்ற வரையறையை ஒவ்வொரு வேதிப்பொருளுக்கும் வைத்திருக்கிறார்கள். அதாவது அந்த அளவுக்கு எந்த வேதிப்பொருள் நம் உடலுக்குள் சென்றாலும் அவ்வளவாக ஆபத்து இல்லை என அர்த்தம். இந்த அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் வேதிப்பொருட்கள் நம் உணவு மூலமே பெருமளவு சென்று விடுகிறது. அதைத் தாண்டி இப்படி அழகு சாதனப் பொருட்களால் வேறு நச்சுக்களை உடலுக்குள் திணிக்க வேண்டுமா என்பதே கேள்வி.

பளிச்சிடும் வெள்ளை நிற அழகைத் தருவதாகக் கூறும் ஃபேஷியல் க்ரீம்களில் 32 பிராண்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 26 க்ரீம்கள் பெண்களுக்கானது. ஆறு க்ரீம்கள் ஆண்களுக்கானது. பரிசோதனையில் 44% க்ரீம்களில் பாதரசம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 

நம் உடலுக்குள் அதிக பாதரசம் சென்றால் சிறுநீரகம் பாதிக்கப்படும் .தோலில் நிறமாற்றம் ஏற்படும். ஆங்காங்கே தழும்புகள் ஏற்படக்கூடும். ஆதலால் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்களில் சட்டப்படி உடலுக்கு  பூசும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கிரீம் செய்ய பயன் படுத்தப்படும் பொருள் எதிலாவது பாதரசம் அறியாமல் கலந்திருந்தாலும் அதை சுத்தம் செய்ய வேண்டும் என்பது விதி. 

இப்படி எல்லாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்து தயாரித்து விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களை, வாங்கி பயன்படுத்தினாலும் அதன் மூலமாக உடலுக்குள் நச்சுக்கள் உட்செல்வதை தடுக்க முடிவதில்லை என்கிறது ஆய்வு. ஆதலால்  நலமுடன் வாழ மிக மிகக் குறைந்த அளவே செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவோம்! இல்லையேல் முற்றிலுமாக தவிர்ப்போம்! 

 அதற்கு மாறாக இயற்கை அழகு சாதனப் பொருட்களான கற்றாழை, சந்தனம், பன்னீர், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில்  ரசாயனம் கலக்காமல் அவ்வப்பொழுது வீட்டிலேயே தயாரித்து அழகுப்படுத்திக் கொள்வோமாக!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT