விளையாட்டு

முதல் போட்டியில் இந்தியா தோற்றதற்கு இவர்கள்தான் காரணம்! எரிந்து விழும் ரசிகர்கள்!

மணிகண்டன்

தற்போது இந்திய அணி வங்கதேச பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான நிலையில் வங்கதேச அணியிடம் தோற்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களிலேய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியும், அணியின் ஸ்கோர் 136 என்ற நிலை இருக்கும்போதே 9 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இருந்தும் இந்திய அணி ஜெயித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போதுதான் இந்திய அணியின் வெற்றியும் தகர்த்தெறியப்பட்டது.

கடைசி விக்கெட்டிற்கு களத்தில் இருந்த வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் - முஷ்டஃபிகுர் ரஹ்மான் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்தை அபாரமாக கையாண்டு அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தனர்.

இந்த போட்டியையப் பொறுத்தவரை, இந்திய பெளலர்கள் யாரும் ஒரு யார்க்கர் கூட வீசவில்லை என்பதும் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் வங்கதேச அணிக்கு எதிராக எந்தவெரு யார்க்கரையும் வீசாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் அருமையாக பந்து வீசி 5 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் அவருக்கு மேற்கொண்டு ஓவர்கள் வழங்காததும் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அடுத்து வங்கதேச அணி 150 ரன்களைக் கடந்திருந்தபோது, விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல் ராகுல், மெஹிதி ஹசனிடம் இருந்துவந்த கேட்ச்சை பிடிக்க தவறிவிட்டார். இதுவும் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே மாறியது. மொத்தத்தில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துமே இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவ காரணமாக அமைந்துள்ளது.

முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்நது 2வது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT