Vivekananda and Shami 
விளையாட்டு

விவேகானந்தரும் முகமது ஷமியும்…

பாரதி

சம்பந்தமே இல்லாமல் எப்போதோ வாழ்ந்த விவேகானந்தரையும், இப்போது கிரிக்கெட் வீரராக இருக்கும் முகமது ஷமியையும் ஏன் ஒன்றாக இணைக்கிறீர்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஏனெனில் அவர்கள் இருவருக்கும் ஒரு கிரிக்கெட் தொடர்பு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம் வாருங்கள்…

இருவருடைய சம்பந்தம் பற்றித் தெரிந்துக்கொள்வதற்கு முன்னர் சில பல வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு கிரிக்கெட் கிளப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.

18ம் நூற்றாண்டில் முதன்முதலில் ஆங்கிலேயர்களால் கல்கத்தா கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1884ம் ஆண்டு திரைப்பட மேஸ்ட்ரோ சத்யஜித் ரேவின் தாத்தா 'தி டவுன் கிளப்' என்ற கிரிக்கெட் கிளப்பை திறந்தார். அப்போது இந்த இரண்டு கிளப்களே மிகவும் முக்கியமான கிளப்களாக இருந்தன. அப்படியிருக்க 1920 களில் இதுபோன்ற 50க்கும் மேற்பட்ட கிளப்கள் பலரால் திறக்கப்பட்டன. 

கல்கத்தா கிரிக்கெட் கிளப் (சிசிசி), கல்கத்தா ரேஞ்சர்ஸ், டல்ஹவுசி ஏசி ஆகியவை ஆங்கிலேயர்களுக்கு சொந்தமானது. டவுன் கிளப், ஆர்யன் கிளப், குமார்துலி இன்ஸ்டிட்யூட், ஸ்போர்ட்டிங் யூனியன் மற்றும் பெங்கால் ஜிம்கானா ஆகியவை வங்காளிகளால் தொடங்கப்பட்டன. புகழ்பெற்ற மோஹுன் பாகன் (1889 இல் நிறுவப்பட்டது) மற்றும் கிழக்கு வங்கம் (1920) ஆகிய கிளப்களும் ஏறக்குறைய அதே நேரத்தில் தொடங்கப்பட்டன.

வங்காளத்தைச் சேர்ந்த ஆரம்பக்கால டெஸ்ட் வீரர்கள் இந்த கிளப்களில் இருந்து வந்தனர். இந்தச் சூழலில்தான், சுதந்திரப் போராட்ட வீரரான ஹேம சந்திர கோஷ், நல்ல உடலமைப்பும், விளையாட்டில் திறமையும் கொண்ட நரேந்திரநாத் என்ற இளைஞரால் ஈர்க்கப்பட்டார். நரேந்திரநாத் நம்முடைய விவேகானந்தரே ஆவார். அவரை கிரிக்கெட் விளையாட பரிந்துரைத்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா கிரிக்கெட் கிளப் (சிசிசி) அணிக்கு எதிராக டவுன் கிளப்பில் இருந்து நரேந்திரநாத் விளையாடினார்.

விவேகானந்தர் பந்துவீச்சாளராக செயல்பட்டு பல விக்கெட்டுகளை எடுக்க வேண்டுமென்றே விரும்பினார். ஆகையால் அந்தப் போட்டியில் பந்துவீசிய விவேகானந்தர், வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்து அதிரடியாக விளையாடினார்.

இந்தியாவின் தற்போதைய நட்சத்திர வீரரான ஷமி, உத்திரபிரதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற பிறகு அதே டவுன் கிளப்பில் விளையாடியதுதான் சுவாரசியமான விஷயம்.

சத்யஜித் ரேவின் தாத்தாவால் உருவாக்கப்பட்ட தி டவுன் கிளப்பில் விவேகானந்தர் முதல் ஷமி வரை விளையாடியிருக்கிறார்கள் என்பதே இந்திய மக்களின் விளையாட்டு மீதான ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT