விளையாட்டு

மாசு மருவற்ற சருமம் வேண்டுமா? அப்ப இதை படிங்க.....!

கல்கி டெஸ்க்

முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை என எத்தனையோகாரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும்.

அதற்கான சில எளிய டிப்ஸ்...

*முகத்தில் பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக, தனியாகத் தெரியாது.

*வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை தீரும். பொடுகால் ஏற்படும் பருக்கள் தவிர்க்கப்படும்.

*வெளியே செல்வதற்கு முன்பு, சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதால் நீண்ட நேரம் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும்.

*எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் கூட பருக்கள்ஏற்படுகின்றன. மேலும், உடலில் சேரும் கொழுப்பு, மன இறுக்கம், மலச்சிக்கல்போன்றவற்றாலும்கூட பருக்கள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க, துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். சிவந்த கன்னங்கள் பெறுவதற்கு முகத்துக்கும் உடலுக்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். அது ஆழ்ந்த தூக்கத்தில்தான் கிடைக்கும். உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும். இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும்.

* சாப்பிடும் உணவு வைட்டமின் சி நிறைந்ததாகவும், தேவையற்ற கொழுப்பு மற்றும் இனிப்பு குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

* வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

* தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில்மிதமான வெந்நீர் ஊற்றி உப்பு, எலுமிச்சைச் சாறு விட வேண்டும். அதில் இருபாதங்களையும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யவேண்டும். இதேபோல் கை விரல் நகங்களையும் சுத்தம் செய்யலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT