விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களில் சுருண்டது!

ஜெ.ராகவன்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் நஷ்டமின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மாவும், முதல்முதலாக களத்தில் இறங்கிய யஷாஷ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடினார்.

டொமினிகாவில் உள்ள விண்ட்ஸர் பார்க் மைதானத்தில் இந்தி. மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிஸ்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது.

கிரெய்க் பிராத்வைட், சந்தர்பால் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து 31 ரன்கள் எடுத்தனர். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் வீழ்ந்தனர். அவர்கள் இருவரும் அவுட்டானது இந்தி அணிக்கு சற்று நிம்மதியை அளித்தது.

ரேமன் ரெய்ஃபர் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் இருவரும் விளையாடியபோதிலும் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அவர்களும் அவுட்டானார்கள். இடைவேளைக்குப் பிறகு ஜோஷுவா டி சில்வா ரவீந்த ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டானார்.

பின்னர் ஜாஸன் ஹோல்டர் புதிய ஆட்டக்காரர் அலிக் அதாநாஸியுடன் சேந்து 6-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. அதாநாஸி 47 ரன்கள் எடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். ஆனாலும் அவர் 50 ரன்ளை எட்டுவதற்குள் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசியதால் மேற்கிந்திய அணி வீர்ர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் 64.3 ஓவர்களில் 150 ரன்களில் சுருண்டனர்.

அஸ்வின் 60 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். 33 வது முறையாக அவர் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இது நான்காவதாகும்.

பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் நஷ்டமின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தால். அவர் எடுத்த 40 ரன்களில் 6 பவுண்டரிகள் அடங்கும். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாஸன் ஹோல்டர், கெமர் ரோச் மற்றும் ஜோமல் வாரிகன் ஆகியோர் பந்து வீசியும் விக்கெட் எதையும் எடுக்க முடியவில்லை.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT