Shikar Dhawan 
விளையாட்டு

"எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்துள்ளது" – ஓய்வை அறிவித்த ஷிகர் தவன்!

பாரதி

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷிகர் தவன் உள்நாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளர்.

இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான், அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர், ஷிகர். அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்து தங்க பேட் விருதையும் கைப்பற்றினார். அதேபோல் 2017ம் ஆண்டும் இந்திய அணி 2வது இடத்தைப் பிடிப்பதற்கு முக்கிய பங்காற்றிய இவர், அந்த சீசனிலும் தங்க பேட் விருது வென்றார்.

2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் தவான். அதிலிருந்து மீண்டு வந்த அவர், பின் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தடுமாறினார். மேலும் கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் போட்டிக்கு வந்தனர். இதனால், 2023ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலிருந்து விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல் தொடரிலேயே அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 6 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.8.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். காயம் காரணமாக ஷிகர் தவான் கடந்த சீசனில் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

அதேபோல் இந்த சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதனால் பஞ்சாப் அணி, இளம் வீரர் சாம் கரண் தலைமையிலேயே பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கியது. இதனால் ஷிகர் தவான் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்தநிலையில், ஷிகர் தவன் தந்து ஓய்வறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். "இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம். அந்த லட்சியத்தையும் நான் அடைந்தேன். முதலில் நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் எனது குழந்தை பருவ பயிற்சியாளரான தாரக் சின்ஹா ​​மற்றும் மதன் ஷர்மா ஆகியோரின் கீழ் நான் கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி இன்னொரு குடும்பமும் கிடைத்துள்ளது. புகழ், அன்பு, ஆதரவு என அனைத்தும் கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.

நான் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும்போது நாட்டிற்காக விளையாடிய திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய பிசிசிஐ மற்றும் டிடிசிஐ ஆகியவற்றிற்கு நன்றி. இனி நாட்டிற்காக விளையாட மாட்டேன் என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இதுவரை விளையாடியதே பெரிய சாதனையாகும். எனக்கு ஆதரவளித்த என் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.” என்று தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

ஷிகர் தவன் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஓய்வுபெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆகையால், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

SCROLL FOR NEXT