வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.
வேலை இடம்: தென்காசி மாவட்டம்
வேலைவாய்ப்பு வகை: ஒப்பந்த அடிப்படை
காலியிடங்கள் : 18
காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
வட்டார இயக்க மேலாளர் - 2
வட்டார ஒருங்கிணைப்பாளர் - 16
அதிகபட்ச வயது வரம்பு: 28
சம்பளம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்:
1.வட்டார இயக்க மேலாளர்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணிணி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (கணிணி அறிவியல் அல்லது கணிணி பயன்பாட்டு அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.)
2.வட்டார ஒருங்கிணைப்பாளர்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தபட்சம் 3 மாத காலம் கணிணி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
1.வட்டார இயக்க மேலாளர்:
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.வட்டார ஒருங்கிணைப்பாளர்:
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்த பட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு (Written test)
நேர்காணல் தேர்வு (Interview test)
ஆகியவற்றின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்தகாலம் புதுப்பிக்கப்படும்.
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) விண்ணப்பப் படிவம் PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
official website: https://tenkasi.nic.in/notice_category/recruitment/
தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பிங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.02.2023
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், தென்காசி - 627 811.