Fig fruit water 
ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

ம.வசந்தி

லர் அத்திப்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பி உள்ளன. உலர் அத்தியை ஓர் இரவு மூலம் ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: உலர் அத்திப்பழங்களில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள்,பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும்  உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கத் தேவையானது.

2. செரிமானத்தை மேம்படுத்துகிறது: அத்தியின் தண்ணீரில் அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உள்ளதால்  குடல் இயக்கம் சீராக செயல்பட உதவி செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

3. உடல் எடை குறைக்க உதவுகிறது: அத்திப்பழத்தின் தண்ணீர் பருகுவதால் நீண்ட நேரம்  சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டு  பசி கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடையை குறைக்கிறது .

4. இதய ஆரோக்கியம்: அத்தியில் கெட்ட கொழுப்பை குறைக்க  நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. அத்தியை ஊறவைத்த தண்ணீரை பருகுவது  இதய ஆரோக்கியத்தை அதிகரித்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

5. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: அத்தியில் அதிகளவில் கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உள்ளதால் இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், அதன் சக்தியை அதிகரிக்கவும் சிறந்தது. தினமும் அத்தியை ஊறவைத்த தண்ணீரை பருகுவது எலும்புப்புரை நோய் மற்றும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

6. இரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது: அத்தியின் தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் பருகும்போது அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்துகின்றது.

7. நோய் எதிர்ப்பாற்றல்: அத்தியை ஊற வைத்த தண்ணீரில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது  உடலில் ஏற்படும் ஃப்ரிரேடிக்கல்களை கட்டுப்படுத்த உதவுவதோடு உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்து தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

8. சரும ஆரோக்கியம்: அத்திப்பழத்தின் தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமத்தை ஆரோக்கியமாக வைத்து  முகப்பருக்களை குறைத்து, இயற்கையான பொலிவைத் தருகிறது. எனவே, அத்திப்பழத்தின் தண்ணீர் மேலும் வயோதிகம் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

9. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்: அத்தியின் தண்ணீரை பருகுவதால்,உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து அனிமியாவை தடுத்து ஒட்டுமொத்த உடலுக்கும் ஆற்றலைத் தருகிறது.

10. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது: அத்திப்பழத்தின்  பருகும்போது, அது உடலை தினமும் சுத்தம் செய்து கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. உடலை நீர்ச்சத்துடன் பாதுகாக்கிறது.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT