Camu Camu
Camu Camu https://en.amazonas-products.com
ஆரோக்கியம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிடைத்தற்கரிய 10 உலர் பழங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

நாம் உட்கொள்வதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்த பழங்களும் உலர்பழங்களும் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டோம். அவற்றிலும் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட பத்து வகைப் பழங்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

காமு காமு (Camu Camu) என்ற பெரி பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை மொத்த உடல் நலம் காக்கவும், ஆரோக்கியம் தரவும் உதவுகின்றன.

பெப்பினோ மெலன் (Pepino Melon) என்ற பழம் இனிப்பு வெள்ளரி என தமிழில் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் விதைகளில் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன.

கிவானோ (Kivano) பழமும் அதன் விதைகளும் உண்ணக்கூடியவை. இதில் மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் பல ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளன.

Barhi dates

பர்ஹி டேட்ஸ் (Barhi dates) என்ற பழமானது இனிப்பு சுவை கொண்டது. இதில் மக்னீசியம், பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.

உலர் பிளம்ஸ் (Prune)ஸில் நார்ச்சத்து, வைட்டமின் K மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை எலும்புகளின் அடர்த்திக்கு வலு சேர்க்க  மிகவும் உதவுபவை.

உலர் அத்திப் (Fig) பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

துரியன் விதைகள் (Durian Seeds) ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன், நார்ச்சத்து ஆகியவை நிறைந்தவை. இது தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.

பிஸ்தாசியோ கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகம். உள்ளன.

உலர் ஆப்ரிகாட் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

செம்பெடாக் (Cempedak) என்ற பழம் பலாப்பழம் போன்றது. தென்கிழக்கு ஆசியாவில் வளர்வது. அதிகளவு வைட்டமின்களும் மினரல்களும் கொண்டது.

மேற்கூறிய ட்ரை ஃபுரூட்ஸ் வகைகளையும் நம் அன்றாட உணவில் சேர்த்து உண்போம்; உடல் ஆரோக்கிய மேன்மை பெறுவோம்.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

SCROLL FOR NEXT