Bad breath 
ஆரோக்கியம்

வாய் துர்நாற்றமா? No Problem! அதைப் போக்க சுலபமான 10 வழிகள்!

கல்கி டெஸ்க்

- டாக்டர். ஆர்.வி.அபராஜிதா 

நம்மில் பெரும்பாலோர் அவ்வப்போது சந்திக்கும் ஒரு பிரச்சினை வாய் துர்நாற்றம். நாம் பேசும் போது வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் நமக்கும் சங்கடம்.  பிறருக்கும் சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.   இந்த பிரச்சினையைத் தவிர்க்க நம்மில் பலர் உடனடியாக மவுத்வாஷ் அல்லது சிக்லெட்டைப் பயன்படுத்துவது வழக்கம். இப்படிச் செய்தால் உடனே துர்நாற்றம் சரியானது போல இருக்கும்.  ஆனால் சற்று நேரத்திலேயே மறுபடியும் துர்நாற்றம் வீசத் துவங்கிவிடும். காரணம் மவுத்வாஷ், சிக்லெட் போன்றவை துர்நாற்றத்தை மூடி மறைக்க உதவுமே தவிர துர்நாற்றத்தை நிரந்தரமாகப் போக்குவதில்லை.

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்னதான் செய்யலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  உங்களுக்காகத்தான் இந்த பயனுள்ள 10 வழிகள். 

1. முறையாக பல் தேய்த்தல் : வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதுதான் முதல்வழி.   பற்களை சுத்தம் செய்வதற்கென பிரத்யேக வழிமுறைகள் உள்ளன.   பல் துலக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டு தினமும் இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

2. ஃப்ளாஸிங் செய்வது : வாயில் தங்கிவிடும் உணவுத் துகள்களை உட்கொண்டுதான் நுண்கிருமிகள் துர்நாற்ற வாயுவை வெளிவிடுகின்றன.  பற்களைத் தேய்ப்பதால் மட்டும் இவை அழிவதில்லை. எனவே ஃப்ளாஸிங் நூல் கொண்டு பற்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். 

3. நாக்கை சுத்தம் செய்தல் : நாக்கின் மீதும் நுண்கிருமிகள் தங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நாக்கையும் நன்றாக பல்துலக்கி மற்றும் “டங் ஸ்க்ரேப்பர்” (Tongue Scraper) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

4. வாய் கொப்பளித்தல் : ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்த உடன் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். இரவில் வெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்ல பலனைத் தரும்.

5. தவிர்க்க வேண்டியவை : மது, காபி, புகை பிடித்தல், சர்க்கரை அல்லது அமிலத்தன்மை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

6. சுவாசிப்பதில் கவனம் : வாய் வழியாக சுவாசிக்காமல் மூக்கு வழியாக மட்டுமே சுவாசிக்கப் பழக வேண்டும்.   

7. பற்காரை : பற்காரையை பல்மருத்துவரிடம் சென்று கட்டாயமாக ஸ்கேலிங் (Scaling) செய்து அகற்ற வேண்டும்.  

8. பல்சொத்தை : பல்சொத்தை (Cavity) மற்றும் ஈறு தொடர்பான பிரச்சினைகளை தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும்.

9. தண்ணீர் அருந்துதல் : அவ்வப்போது தண்ணீரை குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.   

10. உணவு முறையில் கவனம் : நன்கு மென்று சாப்பிடும் பழம் மற்றும் காய்கறி வகைகளை அதாவது ஆப்பிள் மற்றும் காரட் முதலானவற்றை எடுத்துக் கொள்ளலாம். செயற்கை உமிழ்நீர், சர்க்கரை இல்லாத சுவிங்கம் முதலானவற்றை பல்மருத்துவரின் பரிந்துரைப்படி உபயோகிக்கலாம்.  

இதையெல்லாம் செய்து பாருங்க.  அப்புறம் வாய் துர்நாற்றம் அப்படின்னா என்னன்னு கேட்பீங்க.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT