குடல் ஆரோக்கியம் 
ஆரோக்கியம்

மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

எஸ்.விஜயலட்சுமி

ழைக்காலத்தில் செரிமான ஆரோக்கியத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கிறது. மனித உடலில் ஈரப்பதத்தின் அதிகரிப்பால் செரிமானம் மெதுவாக நடைபெறும். மேலும், பல்வேறு இரப்பை, குடல் பிரச்னைகள் வரலாம். சில வகையான உணவுகள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. இஞ்சி: இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான பண்புகள் கொண்டது. செரிமான சக்தியை நன்றாகத் தூண்டும். உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் பண்பிற்கு இஞ்சி உதவுகிறது. இஞ்சி டீ குடிப்பது அல்லது இஞ்சியை உணவில் சேர்ப்பது அவசியம். இதனால் அஜீரணம், உடல் வீக்கம் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் குமட்டலைப் போக்க இது உதவும்.

2. மஞ்சள்: இதில் உள்ள குர்குமின் ஒரு சக்தி வாய்ந்த அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது குடல் அழற்சியை குறைக்க உதவுகிறது. நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதனால் மஞ்சளை தவறாமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. தயிர்: புரோபயோடிக் நிறைந்த உணவு தயிர். இது குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வீட்டிலேயே தயிர் தயாரித்து உண்பது இன்னும் சிறந்தது.

4. கீரைகள்: கீரைகள், இலைக்காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் மற்றும் செரிமானத்திற்கும் உதவும். இதில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மலச்சிக்கலை தடுக்கின்றன. குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெற உதவுகின்றன.

5. பூண்டு: இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை தடுக்க உதவுகிறது. தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

6. வாழைப்பழங்கள்: உடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவும் அருமையான பழம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலுள்ள பெக்டின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

7. ஊறுகாய்: புளித்த வகை உணவான ஊறுகாயில் புரோபயோடிக் நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கிறது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

8. ஓட்ஸ்: கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலம் ஓட்ஸ். இது செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

9. பப்பாளி: இதில் வைட்டமின்கள் சி மற்றும் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பப்பெய்ன் போன்ற என்சைம்கள் நிரம்பியுள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தை போக்க உதவுகிறது.

10. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடலின் நச்சுத்தன்மையை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT