லெமன் கிராஸ் என்பது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. இந்த நீளமான தண்டுகளை சிறிதாக நறுக்கி சூப்புகள், குழம்புகள் போன்றவற்றில் சேர்க்கலாம். டீ தயாரிக்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. லெமன் கிராஸ் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது. இவை உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீரேடிக்கல்களை நடுநிலையாக செயல்பட உதவுகின்றன.
2. கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
3. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கீல்வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது.
4. செரிமானத்திற்கு உகந்தது. வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகள், செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகப் பயன்படுகிறது.
6. இதன் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவுகிறது. கவலையை நீக்குகிறது.
7. லெமன் கிராஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கின்றன.
8. இதில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் பூஞ்சைகளையும் எதிர்க்கிறது. இதனால் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும்போது லெமன் கிராஸ் டீ குடித்தால் காய்ச்சலை குறைக்க உதவுகிறது.
9. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.
10. லெமன் கிராஸில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற நல்ல வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. சருமத்தை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் சருமம் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்க உதவுகிறது.
11. உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. லெமன் கிராஸ் டீயை தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து செரிமானம் நன்றாக நடைபெறுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
லெமன் கிராஸை உணவில் பயன்படுத்தும் முறைகள்:
லெமன் கிராஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூப்புகள் மற்றும் குழம்புகளில் சேர்க்கலாம். குழம்பு கொதிக்கும்போது சேர்த்துவிட்டு பரிமாறும் முன்பு இவற்றை அகற்றி விடலாம்.
லெமன் கிராஸ் பேஸ்ட்டை உருவாக்கலாம். இஞ்சி. பூண்டு மற்றும் சிறிதளவு லெமன் கிராஸ் துண்டுகளை சேர்த்து அரைத்து ஒரு சுவையான டேஸ்ட்டை உருவாக்கலாம். இதை இறைச்சி வகை உணவுகள் செய்யப் பயன்படுத்தலாம்.
லெமன் கிராஸ் டீ தினமும் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும். கூடுதல் சுவைக்காக தேன் சேர்க்கலாம். சாலடுகளில் இவற்றை சேர்க்கலாம். சாஸ்கள் போன்றவற்றிலும் சேர்க்கலாம்.
சிறிதாக நறுக்கப்பட்ட லெமன் கிராஸை வெண்ணையில் கலக்க வேண்டும். வறுக்கப்பட்ட இறைச்சி வகைகளின் மேல் இவற்றை தடவிப் பயன்படுத்தலாம்.