Lemon juice mixed with honey https://news.lankasri.com
ஆரோக்கியம்

மெட்டபாலிஸ ரேட் உயரவும் ஒபிசிட்டி குறையவும் உதவும் 4 பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

வாழ்வியல் மாற்றம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக தற்போது 'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமனாகும் நோய் பரவலாக எங்கும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். ஒபிசிட்டியானது நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மற்றும் தைராய்டு போன்ற அபாயகரமான நோய்களுக்கு ஆரம்பப்புள்ளியாய் அமைகிறது. தொடர் உடற்பயிற்சியும், வீட்டு சாப்பாடும் ஒபிசிட்டி குறைய உதவும். உடல் பருமன் அதிகரிக்க மெட்டபாலிஸ ரேட் குறைவதும் ஒரு காரணியாகிறது.

மெட்டபாலிஸம் நம் உடலின் செல்களைப் பாதுகாக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் செய்கிறது. நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றுவதும் மெட்டபாலிஸம்தான். மெட்டபாலிஸ ரேட் உயரும்போது உணவுகளிலுள்ள ஊட்டச்சத்துக்களான கொழுப்புச் சத்து, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் விரைவில்  சக்தியாக மாற்றப்படுகின்றன. இந்த செயலில் கணிசமான அளவு கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைய வாய்ப்பேற்படுகிறது.

கீழே கூறப்பட்டு இருக்கும் 4 விதமான ஆரோக்கிய பானங்கள் ஒபிசிட்டி குறையவும் மெட்டபாலிஸ ரேட் உயரவும் உதவுபவை.

* காலையில், ஒரு துண்டு பட்டை (Cinnamon)யை ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் போட்டு அந்த நீர் பாதியாய் குறையும் காய்ச்சி இறக்கவும். சூடு ஆறியபின் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கவும்.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் அரை டீஸ்பூன் தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பலன் தரும்.

* ஃபென்னெல் (பெருஞ்சீரகம்) வாட்டர் அருந்துவதால் ஜீரணம் சிறப்பாக நடைபெற்று, மெட்டபாலிஸ அளவு உயர்கிறது.

* செலரி வாட்டர், அடிக்கடி உண்டாகும் பசியுணர்வைத்  தடுத்து எடைக் குறைப்பிற்கு நன்கு உதவி புரியும் ஒரு பானம்.

மேற்கூறிய பானங்களை தொடர்ந்து அருந்துவதும் சிறந்த வாழ்வியல் முறையைப் பின்பற்றுவதும் நம் உடல் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்க உதவும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT