ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் நாள், நாழிகை இதையெல்லாம் குறித்து அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று ஜாதகம் கணிப்போம். ஆனால், அதைவிட மிகவும் முக்கியமானது வயிற்றில் கரு உருவானவுடன் அது எதிர்காலத்தில் ஆரோக்கியமான மனிதராக இருக்க நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். தாயின் வயிற்றில் கரு ஆரோக்கியமாக வளர்ந்து நல்லபடியாக குழந்தையை ஈன்றெடுக்க இயற்கையான நான்கு பொருட்களை நாம் அவ்வப்போது உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உளுந்து: உளுந்தங்களி, பனை வெல்லம், நல்லெண்ணெய், வாழைப்பழம், கோழி முட்டைபோன்றவை பூப்பெய்திய பெண்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவாக இருந்தன. 'இடுப்புக்கடு பலமாம்' என்கின்ற சித்தர் பாடல், உளுந்தால் செய்த உணவுகள் பெண்களின் இடுப்புக்கு வலிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதை அளவாக உண்டால் உடலுக்கு வலிமையையும் அழகையும் கொடுக்கிறது. உளுந்து சேர்த்து சமைத்த சாதம் பண்டைய தமிழர்களின் திருமண நிகழ்வுகளில் இடம்பெற்றிருப்பதை அகநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது. விலங்கின மருத்துவத்தில் விலங்குகளின் மகப்பேறு காலத்தில், கருப்பை தசைகளை வலுப்படுத்த உளுந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
2. பனைவெல்லம்: கருப்பையை வலுப்படுத்த சதகுப்பை, கருஞ்சீரக சூரணத்தைப் பனைவெல்லத் தில் வைத்துப் பெண்களைச் சாப்பிட் வைப்பது கிராமத்து வழக்கம். பருவமடைந்த பெண்களுக்குப் பனைவெல்லம் சேர்ந்த உணவை வழங்குவதால் எலும்புகள் பலம் பெற்று, பிற்காலத்தில் எலும்பு அடர்த்தி குறைவு நோய் (Osteoporosis) உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைக்கும் என்பது நம் மூதாதையர்களின் அறிவியல் கலந்த அனுபவக் குறிப்பு. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக இரத்த இழப்பை, இதில் உள்ள இரும்புச் சத்து ஈடுகட்டும் என்பதால்தான் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பனை வெல்லம் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பனைவெல்லம் கொடுக்கிறது.
3. வாழைப்பழம்: பூப்பெய்தியவுடன் கொடுக்கப்படும் மிக முக்கியமான மற்றொரு உணவு, முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம். இதிலுள்ள 'Tyrptophan' மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் மனச்சோர்வை அகற்றி உற்சாகத்தைத் தரக்கூடியது. வாழையில் உள்ள ஊட்டச்சத்துகள், அயர்ந்துபோன உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. விளையாட்டுத் துறையில் கொடுக்கப்படும் உற்சாகமூட்டும் உணவில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.
4. கற்றாழை: புற்றுநோய் செல்களை எதிர்த்துச் செயல்படும் திறன் கற்றாழைக்கு உண்டு 'International Immunopharmacology ஆய்விதழில் வெளியான அறிக்கை இதைச் சுட்டிக்காட்டுகிறது. கற்றாழையை அடிக்கடி பயன்படுத்திவந்த அக்காலப் பெண்கள், புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதில் வியப்பேதுமில்லை. கருப்பை சார்ந்த தொந்தரவுகளுக்கு, வெகுகாலமாகப் பயன்பட்டுவரும் முக்கிய மூலிகை கற்றாழை. கற்றாழை சோற்றை மோரிலே கலந்து குடித்து வர, கருப்பை தொந்தரவுகள் மறையும். குளிர்ச்சித் தன்மையைக்கொடுத்து, உடல் சூட்டைக் குறைக்கக்கூடியது கற்றாழை. கருப்பை தொந்தரவுகளுக்கு கற்றாழை சேர்த்துச் செய்யப்படும் மருந்துகள், சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் ஏராளம் உண்டு.