4 types of fruits suitable for people with high blood pressure https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 4 வகை பழங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே தற்போது பல பேர் உயர் இரத்த அழுத்தம் என்ற உடல் நிலைக் கோளாறின் தாக்கத்துக்கு உள்ளாவதைக் கேள்விப்படுகிறோம். ஆரம்ப காலங்களில் இதை, 'ஸைலன்ட் கில்லர்' என வர்ணித்து பயமுறுத்தி வந்தனர். ஏனெனில், இதற்கு தொடர்ந்து மருத்துவ உதவி மேற்கொண்டு இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பராமரிப்பது மிகவும் அவசியமாயிருந்தது. தவறினால் இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற அபாயங்களை எதிர்கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள நவீன மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு காரணங்களால் இதை அனைவரும் சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்ண வேண்டிய நான்கு வகைப் பழங்கள் எவையென என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அவகோடா என்னும் தனித்துவம் மிக்க பழத்தில் இதயத்துக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பொட்டாசியம் சத்தும் அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்தும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முன் நிற்பவை. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியம் காக்கவும் உதவி புரிகின்றன.

ஆரஞ்சு மற்றும் அதுபோன்ற சிட்ரஸ் பழ வகைகளில் உள்ள வைட்டமின் C, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரவும் உதவுகின்றன. சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃபிளவனாய்ட் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாழைப் பழங்களில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இது இரத்த அழுத்தத்தின் அளவைக் குறைக்க விரும்புபவர்களின் சிறந்த தேர்வாக அமைந்து, இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. தினசரி இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிடுவது இவர்களுக்கு நல்ல பலன் தரும்.

ஸ்ட்ரா பெரி, ப்ளூபெரி, ராஸ்பெரி உள்ளிட்ட பெரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலுள்ள ஃபிளவனாய்ட் என்ற கூட்டுப்பொருள் இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. பெரி பழங்களில் உள்ள வைட்டமின் C, வீக்கங்களைக் குறைத்து இரத்த ஓட்டம் சரிவர நடைபெறவும் இதயம் பழுதடையாமல் இயங்கவும் உதவுகிறது.

மேற்கூறிய பழ வகைகளை அனைவரும் உண்போம்; உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

இப்படி உப்புமா செய்தால் உடனே காலியாகும்… வேண்டாம் என்றே சொல்ல மாட்டாங்க! 

இந்த 5 விஷயங்கள் தெரியாமல் மேக்கப் பொருட்களை வாங்காதீர்கள்! 

பலரும் அறியாத தேற்றான்கொட்டையின் பல்வேறு பயன்கள்!

இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் நிச்சயம் புத்திசாலிகளாகத்தான் இருக்க வேண்டும்!

சிவபெருமானுக்கும் கயிலாயத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

SCROLL FOR NEXT