Drinks that increase platelet count 
ஆரோக்கியம்

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

ம.வசந்தி

பிளேட்லெட் என்பது நமது உடலில் இரத்தம் உறைதல் மற்றும் காயத்தை குணப்படுத்த உதவுகின்றன. இந்த நிலையில், ‘த்ரோம்போசைட்டோபீனியா’ என்று அழைக்கப்படும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இயற்கையிலேயே பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜூஸ் வகைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் சாறில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் பிளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், பீட்ரூட் சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.

2. மாதுளை ஜூஸ்: மாதுளை சாறில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்து உடலில் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியைத் தூண்ட உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

3. கேரட் மற்றும் பசலை கீரை ஜூஸ்: கேரட்டில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளதால். இது இரத்த உறைதலுக்கு இன்றியமையாததாகிறது.. அதேநேரத்தில்  பசலை கீரையில் இரும்பு மற்றும் ஃபோலேட் அதிக அளவில் உள்ளதால் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.  பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சத்தான ஜூஸை உருவாக்க கேரட்  மற்றும் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. கிவி மற்றும் ஸ்ட்ராபெரி ஜூஸ்: கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டிலும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் பிளேட்லெட் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. மேலும், இந்த பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளதால், பிளேட்லெட்டுகளை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. சுவையான மற்றும் சத்தான ஜூஸை உருவாக்க கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை ஒன்றாகக் கலந்து குடிக்கவும்.

5. ஆரஞ்சு மற்றும் இஞ்சி ஜூஸ்: ஆரஞ்சில் வைட்டமின் சி சத்தும், இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இந்த இரண்டு பொருட்களையும் ஒரு ஜூஸில் இணைப்பது இயற்கையாகவே பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அதேபோல இஞ்சி உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, ஆரோக்கியமான பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

மேற்சொன்ன 5 ஜூஸ் வகைகளும் இயற்கையாகவே பிளேட்லெட்டுகளில் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT