ஆப்பிள் சைடர் வினிகர் நொதித்த ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான பொருளாகும். இது பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நன்மைகள் என்று பார்க்கும்போது ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படுத்தல் போன்றவை அடங்கும்.
ஆப்பிள் சாற்றை நொதிக்க வைக்கும்போது அதில் அசிட்டிக் அமிலம் உள்பட பல ஆரோக்கிய சேர்மங்கள் உருவாகின்றன. இந்தப் பதிவில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், இன்சுலின் உணர்ந்திறனை மேம்படுத்தவும் உதவும் என சில ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஆப்பிள் சைடர் வினிகரைப் பருகினால் உடல் கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம். இது பசியையும் கட்டுப்படுத்துவதால், அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோகத்தை மேம்படுத்த உதவும் என சொல்லப்படுகிறது.
மேலும், ஆப்பிள் சைடர் வினிகர் புற்றுநோய், சரும பாதிப்புகள் மற்றும் வாத நோய்க்கு எதிராக செயல்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆப்பிள் சைடர் வினிகரின் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிராக போராட உதவும். மேலும் இதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, ஆர்தரைட்டிஸ் போன்ற அலர்ஜி நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் ஆப்பிள் சைடர் வினிகரை மிதமாக உட்கொள்வது முக்கியம். ஏனெனில் அதிகமாக உட்கொண்டால் பல அரிப்பு, தொண்டை எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு வந்தால் அல்லது மருத்துவ நிலைகள் இருந்தால் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
ஆப்பிள் சைடர் வினிகரை உணவில் சேர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதை நீங்கள் எளிதாக தண்ணீரில் கலந்து குடிக்கலாம், சாலட்கள் அல்லது சாஸ்களில் சேர்த்து பயன்படுத்தலாம். இதை ஒரு ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்தலாமே தவிர அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.