Foods that lower uric acid 
ஆரோக்கியம்

யூரிக் அமிலத்தை குறைக்கும் 5 வகையான உணவுகள்!

ம.வசந்தி

டலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து விட்டால் மூட்டு பகுதிகளில் வலி, வீக்கம், உடல் விறைப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், குளிர் காலத்தில் இந்த அறிகுறிகள் தீவிரமாகி மூட்டு பகுதிகளில் மேலும் வலியை ஏற்படுத்தும். அந்த வகையில் யூரிக் அமிலத்தை குறைக்கும் 5 வகையான உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. குறைந்த கொழுப்பை உடைய பால் பொருட்கள்: குறைந்த கொழுப்பை உடைய பால் பொருட்களான பால், யோகர்ட், சீஸ் போன்றவற்றில் கால்சியம், புரதச்சத்து மற்றும் லக்டல்புமின் இருப்பதால் இவை யூரிக் அமில சுரப்பை குறைக்கின்றன. மேலும், சிறுநீரக இயக்கத்திற்கு இவை ஆதரவளிப்பதோடு உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்கி மூட்டு பகுதிகளுக்கு ஆரோக்கியமானவையாக இருக்கின்றன.

2. சிட்ரஸ் பழங்கள்: குளிர்காலத்தில் திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வதால் இதில் உள்ள. வைட்டமின் C, நார்ச்சத்து, பிளவோனாய்டுகள் ஆகியவை வீக்கங்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரக இயக்கத்தை அதிகப்படுத்தி யூரிக் அமிலம் சுரக்கும் அளவையும் குறைக்கிறது.

3. பச்சிலைகள்: கீரை போன்ற பச்சிலைகளில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை வீக்கத்தை தடுத்து நிறுத்துவதோடு, சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்து, யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் அவற்றையும் வெளியேற்றி, கீழ்வாத அறிகுறிகளை தடுத்து விடுகின்றன.

4. நட்ஸ்: வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து இருப்பதால் யூரிக் அமில அளவை குறைப்பதோடு, சிறுநீரக இயக்கத்தையும் சீராக வைத்திருக்கின்றன.

5. முட்டைகள்: குளிர்காலத்தில் முட்டைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இதில் புரதச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் அதிகம் இருப்பதோடு, குறிப்பாக முட்டை வீக்கத்தைக் குறைத்து, பியூரின் சுரப்பதை சமநிலையாக்குகின்றன. மேலும், முட்டையில் உள்ள சிஸ்டைன் யூரிக் அமில படிகங்களை வெளியேற்ற உதவுவதோடு கீழ்வாத அறிகுறிகளை குறைத்து, மூட்டு பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட ஐந்து உணவு வகைகளும் யூரிக் அமிலத்தை குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. இவற்றை உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை பேணுவோம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT