‘சைலன்ட் கில்லர்’ எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உணவில் உப்பையும் எண்ணையையும் குறைத்தால் மட்டும் போதாது, உடற்பயிற்சி, ஓய்வு போன்ற மேலும் சில பழக்கங்களைப் பின்பற்றுவதும் அவசியம். இதற்கும் மேலாக கீழே கூறப்படும் 6 வகை மூலிகை மற்றும் 6 வகை ஸ்நாக்ஸ்ஸை உட்கொள்வதும் சிறந்த பலனளிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. துளசி (Basil): இதன் இலைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் சளி, ஃபுளு ஜுரம், ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களைக் குணமாக்கவும் உதவும்.
2. நெல்லிக்காய்: இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். அதன் மூலம் இரத்த அழுத்தம் நார்மல் ஆகும்.
3. பூண்டு: பூண்டு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து இரத்த அழுத்தம் சமநிலைப் பெற உதவும். இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படும்.
4. பட்டை: பட்டை உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான மூலிகை. இதை ஆயுர்வேத மருத்துவத்தில் இதய நோய்களைக் குணப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் தயாரிக்கப்படும் மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
5. அஸ்வகந்தா: இதுவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அரிய மூலிகையாகும்.
6. செலரி: ஆன்டி ஹைபர்டென்ஸிவ் குணம் கொண்ட மூலிகை செலரி. இது உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும்.
உயர் இரத்த அழுத்தம் என்ற உடல்நலக் கோளாறினால் சிரமப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் உட்கொள்ள வேண்டிய 6 வகை ஸ்நாக்ஸ்:
1. ராஜ்மா சாலட், 2. சன்னா சாலட், 3. சோள ரொட்டி, (Jowar Roti), 4. ஓட்ஸ் வகை உணவுகள், 5. வெள்ளரி ராய்த்தா 6. மூங் தால் சில்லா.
மேலே குறிப்பிட்ட 6 வகை ஸ்நாக்ஸ்களை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சமநிலைப்படும். இத்தோடு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் கலந்து ஆலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாள் தவறாமல் எடுத்துக்கொள்வதும், இரத்த அழுத்த அளவை பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.