நாம் அனைவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பம் இருக்கும். ஆனால், சிலர் தங்கள் உடல் நலனை பராமரிப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். பிட்னஸ் என்பது வெறும் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. இந்தப் பதிவில் சராசரி நபர்களை விட பிட்னஸ் நபர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும் 6 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
உடற்பயிற்சிக்கு முன்னுரிமை: பிட்னஸ் நபர்களுக்கு உடற்பயிற்சி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி என்பது அவர்களின் உடல்நலத்திற்கான முதலீடு என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்: ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதே பிட்னஸ். பிட்னஸ் நபர்கள் பதப்படுத்தப்பட்டு உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கிறார்கள். அதற்கு மாறாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த புரதங்களை அதிகமாக உட்கொள்கிறார்கள்.
போதுமான தூக்கம்: தூக்கம் என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பிட்னஸ் நபர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் கட்டாயம் தூங்குகிறார்கள். போதுமான தூக்கம் உடல் வளர்ச்சி, மன அழுத்தம் குறைத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
போதுமான நீர்: நீர் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பிட்னஸ் நபர்களுக்குத் தெரியும். நீர் உடலின் வெப்பநிலையை சம நிலையில் வைத்திருக்க உதவி, நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சீராக செயல்பட வைக்கின்றது.
மன அழுத்த மேலாண்மை: மன அழுத்தம் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பிட்னஸை கடைபிடிக்கும் நபர்கள் மன அழுத்தத்தை சமாளிக்க பல்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றனர். யோகா, தியானம், இயற்கை சார்ந்த சூழலுக்கு செல்வது மற்றும் பொழுதுபோக்குகள் போன்றவற்றை முயற்சிக்கிறார்கள்.
கற்றல்: பிட்னஸ் என்பது ஒரு நீண்டகாலப் பயணம். இதைக் கடைப்பிடிக்கும் நபர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பற்றி தொடர்ந்து கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் புதிய உடற்பயிற்சிகளை முயற்சி செய்வார்கள், உடற்பயிற்சி குறித்த புதிய தகவல்களை கற்றுக்கொண்டு அதை செயல்படுத்துவார்கள்.
பிட்னஸ் நபர்கள் பற்றிய இந்த புரிதல், நம்மில் பலர் தங்கள் உடல்நல இலக்குகளை அடைய உதவியாக இருக்கும். எனவே, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம், ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.