இரத்த சர்க்கரை அளவு 
ஆரோக்கியம்

உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக் காரணமான 7 வகை உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

யாபெட் என்னும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு படாதபாடு படுவதைப் பார்க்கிறோம். சில வகை உணவுகளின் மறைமுகத் தாக்குதலை அறியாமலே அவற்றை உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவை உயர்த்திக்கொள்ளும் சூழ்நிலையும் உண்டு. அப்படிப்பட்ட 7 வகை  உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கெட்சப் (Ketchup): கெட்சப் ஒரு உப்பான உணவு என நாம் நினைக்கிறோம். ஆனால், இரண்டாவது கூட்டுப் பொருளாக அதில் இனிப்பும் சேர்க்கப்படுவதுண்டு.

2. பால்: இனிப்பு சேர்க்கப்படாதது என்று சொல்லப்படுகிற சோயா பாலிலும்  அதிகளவு புரோட்டீனுடன் சிறிதளவு இனிப்புச் சத்தும் உள்ளது. இதுவும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.

3. துரித உணவு: ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் இவ்வகை உணவுகளில் உள்ள சர்க்கரையும் கார்போஹைட்ரேட்களும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக் கூடியவையே.

4. உருளைக் கிழங்கு: இதன் மென்மைத் தன்மையால், சீக்கிரமே செரிமானமாகி உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. அதிலும் சர்க்கரைச் சத்து இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு உயரும்.

5. ஒய்ட் பாஸ்தா: இது சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் தயாரிக்கப்படுவது. இதிலுள்ள கார்போஹைட்ரேட்கள் சுலபமாக செரிமானமாகி, அதிலும் சர்க்கரை உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் உட்கொள்ளும் உணவின் அளவை அதிகரிக்கச் செய்யவும் வாய்ப்பளிக்கும்.

6. ஒயிட் ரைஸ்: வெள்ளை அரிசி சாதத்தை அடிக்கடி அல்லது அதிகளவில் உண்பதும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.

7. பேகெல் (Bagel): இந்த உணவின் பாக்கெட்களில், ‘கொழுப்பு அற்றது’ அல்லது ‘குறைந்த அளவு கொழுப்புடையது’ போன்ற லேபிள்கள் காணப்பட்டாலும் இவையும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக் கூடியவை.

எனவே, மேலே கூறப்பட்ட 7 வகை உணவுகளைத் தவிர்த்து அல்லது குறைத்து உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த முயற்சிப்போம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT