How to overcome eye irritation caused by smartphone? Image Credits: Hindustan Times
ஆரோக்கியம்

ஸ்மார்ட் போனால் ஏற்படும் கண் எரிச்சலைப் போக்க 7 எளிய வழிமுறைகள்!

நான்சி மலர்

ற்போது இருக்கும் காலக்கட்டத்தில், ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம். அதிலும் போனை பார்க்காமல் இருப்பது என்பது மிகவும் சிரமமான விஷயமாகும். இப்படி நொடிக்கு நொடி  போனைப் பார்ப்பதால் கண் எரிச்சல், வறட்சி, தலைவலி போன்ற பிரச்னைகள் வருகிறது. அதிலிருந்து நம் கண்களைப் பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டிய 7 வழிமுறைகளைப் பற்றி இந்ப்த பதிவில் காணலாம்.

1. அதிகமாகக் கண்களை சிமிட்டுவதன் மூலமாகக் கண்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால் போனை அதிகமாக பார்ப்பதனால் வரும் கண் எரிச்சல், வறட்சி ஆகியவை குறைகிறது. சாதாரணமாக கண்களை சிமிட்டுவதை விட அதிகமாக கண்களை சிமிட்டுவது கண்களை பாதுகாக்கிறது.

2.உங்கள் மொபைல் போனில் Anti reflective coating பயன்படுத்துவதால், இது போனில் இருந்து வரும் அதிகமான Reflection ஐ குறைக்கிறது. இதனால் போனை அதிகமாகப் பார்த்தாலும், கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.

3. போனிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 20 - 20 - 20 ரூல் என்னவென்று தெரியுமா? ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 விநாடிகள் போனை உபயோகப்படுத்துவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தூரத்திலிருக்கும் பொருட்களை பார்ப்பது சிறந்தது. இப்படிச் செய்வதால் கண்களில் உள்ள எலும்புகள் ரிலாக்சாகும்.

4. போனுடைய Brightness உங்களைச் சுற்றியுள்ள வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அட்ஜஸ் செய்து கொள்வது கண்களுக்கு நல்லதாகும். அதிகமான வெளிச்சமோ அல்லது குறைவான வெளிச்சமோ இரண்டுமே கண்களை அதிகமாக ஸ்ட்ரெஸ்ஸை தரும்.

5. போனில் உள்ள எழுத்துக்களின் அளவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மிகவும் சிறிய எழுத்துக்கள் இருக்கும் போது அதைப் படிக்க அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். அதை மாற்றியமைப்பது கண்களுக்கு நல்லதாகும்.

6. போனை அடிக்கடி ஒரு துணி வைத்து துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வது சிறந்ததாகும்.

7. போனை கண்டிப்பாக தூரத்தில் வைத்துப் பார்ப்பது நல்லதாகும். நிறைய பேர் போனை பயன்படுத்தும்போது, முகத்திலிருந்து 8 இஞ்ச் தொலைவில் வைத்திருக்கிறார்கள். அது தவறாகும். கண்டிப்பாக 16 முதல் 18 இஞ்ச் தொலைவில் போனை வைத்துப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லதாகும்.

நீங்கள் போனை அதிகமாகப் பயன்படுத்துவதால், Computer vision syndrome என்ற பிரச்னை வருகிறது. இதை சரிசெய்வதற்கு மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றிப் பயன் பெறுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT