Old People
8 foods eaten by people who lived the longest in the world. 
ஆரோக்கியம்

உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் சாப்பிட்ட 8 உணவுகள்! 

கிரி கணபதி

மனிதர்களால் அதிகபட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பது, பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வரும் ஒரு விஷயமாகும். உலகெங்கிலும் நூறு வயதைக் கடந்து வாழ்ந்ததாக கூறப்படும் நபர்களின் கதைகளைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், அதில் அவர்களின் உணவுமுறை முக்கிய பங்காற்றுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவில் உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் உட்கொண்ட 8 உணவுகள் பற்றி பார்ப்போம். 

  1. பழங்கள் மற்றும் காய்கறிகள்: நீண்ட காலம் வாழ்ந்தவர்களின் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கு வகித்தன. இவை நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிகழ்ந்தவை என்பதால் நோயை தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. 

  2. முழு தானியங்கள்: முழு தானியங்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோகத்தை மேம்படுத்த உதவுவதால், நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. 

  3. நட்ஸ் மற்றும் விதைகள்: நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கிய கொழுப்புகள், புரதங்கள் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளை செயல்பாட்டை சிறப்பாக மாற்றுகின்றன. 

  4. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் விட்டமின்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால் இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடலை எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. 

  5. மீன்: மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. மீன் சாப்பிடுவதால் மூளை செயல்திறன் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் கண் ஆரோக்கியத்திற்கு மீன் பெரிய அளவில் உதவுகிறது. 

  6. ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கிய கொழுப்புகள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலில் ஏற்படும் அழற்சி பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது.

  7. தயிர்:  தயிர் ப்ரோபயோடிக்ஸ் நிறைந்தது. இது செரிமான அமைப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தயிர் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

  8. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இது மூளை செயல்பாட்டை மேம்படுத்தி மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவர்கள் இந்த எட்டு உணவுகளை சாப்பிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட காலம் உயிர் வாழலாம். 

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 6 உளவியல் தந்திரங்கள்! 

பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த சோகைப் பிரச்னையை போக்கும் உணவுகள்!

Dark Matter & Dark Energy பற்றி நமக்கு ஏன் ஒன்றுமே தெரியவில்லை? 

மழைக்கால நோய்களைப் போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!

மர்மங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை! 

SCROLL FOR NEXT