8 Home Remedies for Back Pain! Image Credits: Dr.Stebbing
ஆரோக்கியம்

முதுகு வலி குணமாக வீட்டிலேயே செய்யக்கூடிய 8 வைத்தியங்கள்!

நான்சி மலர்

முதுகு வலி ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் தசை மற்றும் தசைநாரில் ஏற்படும் காயமாகும். இதுபோன்ற சுளுக்குகள் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம், எடையை சரியாகத் தூக்காதது, உடற்பயிற்சி செய்யாமை, அதிக உடல் எடை போன்றவையாகும். இதை சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய 8 வைத்தியங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Posture: சரியாக அமர்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். முதுகு வலி இருப்பவர்கள் Supportive chairல் அமர்வது சிறந்தது. உயரம் குறைவான சேர், சோபா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கார் ஓட்டும்போது ஒரே நிலையில் அமர்ந்து அதிக நேரம் ஓட்டுவதை தவிர்த்து, அவ்வப்போது சிறு இடைவேளை எடுத்துக்கொள்வது நல்லது.

2. Foam Rollers: முதுகு வலியை போக்க Foam roller மிகவும் பிரபலமான சாய்ஸ்ஸாக கருதப்படுகிறது. இதை வைத்து தனக்கு தானே மசாஜ் செய்துக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்துவதால் தசைவலியை போக்கும், முதுகு வலி பிரச்னை தீரும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், வீக்கத்தை குறைக்கும், ரிலாக்ஸாக வைக்க உதவும்.

3. Heat treatment: முதுகில் சுடுதண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது முதுகு வலியை குறைக்க உதவும். சுடுதண்ணீரில் குளிப்பதும் உடல் வலியை போக்கி ரிலாக்ஸாக உணரச் செய்யும்.

4. Balanced Diet: உணவில் Balanced diet ஐ சேர்த்துக்கொள்வது எல்லா ஊட்டச்சத்துக்களையும் கொடுத்து உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிக உடல் எடையுடன் இருப்பதுக்கூட முதுகு வலி வருவதற்குக் காரணமாகும். உடல் எடையை குறைப்பதுகூட வெகுநாளாக இருக்கும் முதுகுவலியை போக்க சரியான வழியாகும்.

5. Sleeping position: தூங்குவதற்கு சரியான மெத்தையை பயன்படுத்துவதும் முதுகுவலியை சரிசெய்ய உதவுகிறது. முதுகுத்தண்டை நேராக வைத்துப் படுத்து உறங்குவது மிகவும் முக்கியமாகும். அதிகமாக தலையணையை தலைக்கு பயன்படுத்துவது கூட கழுத்துவலி, முதுகுவலியை ஏற்படுத்தக்கூடும்.

6. Stretches: உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்வது முதுகு வலியை விரைவில் குணப்படுத்தும். இதனால் தசை ஆரோக்கியம் அதிகரித்து உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து தண்டுவடத்தில் நெகிழும் தன்மை ஏற்பட உதவுகின்றது.

7. Vitamin D: வைட்டமின் டி எலும்பு வலுப்பெறுவதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தி செயல்படவும் பயன்படுகிறது. வைட்டமின் டி எடுத்துக்கொள்வதால், முதுகுவலி பிரச்னை தீர்வதோடு மட்டுமில்லாமல், கால்சியத்தை அதிகமாக உறிஞ்சி எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

8. Turmeric milk: பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது முதுகுவலிக்கு மிகவும் நல்லதாகும். ஏனெனில், இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், அழற்சி எதிர்ப்பு சக்தி இருக்கின்றது. இது முடக்குவாதத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

SCROLL FOR NEXT