Distraction girl https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

கவனச் சிதறலைத் தடுக்க உதவும் 9 சூப்பர் உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மறை எண்ணங்கள் போன்ற பல அம்சங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அதோடு, ஒரு செயலைச் செய்யும்போது கவனத்தை வேறு எதன் மீதும் திரும்ப விடாமல் மனதின் முழு ஈடுபாடும் அச்செயல் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும் முக்கியமானதொரு பக்கபலமாய் இருந்து உதவுகின்றன. அப்படிப்பட்ட உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* மூளையின் சிறப்பான இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், அறிவாற்றல் திறனுக்கும் உதவக்கூடியது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக DHA, நிறைந்த சால்மன், துனா, மாக்கரேல் ஆகிய மீன் வகைகள்.

* ப்ளூ பெரியில் உள்ள அன்த்தோசியானின்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் மூளை செல்களில் ஏற்படும் சிதைவுகளைத் தடுக்கவும் உதவுகின்றன.

* மூளையின் ஆரோக்கியத்திற்கும், ஞாபக சக்தி மற்றும் கற்றல் திறனுக்கும் முட்டையில் உள்ள ச்சோலைன் என்ற கூட்டுப்பொருள் உதவுகிறது.

* வால்நட், பாதாம், சியா விதைகள் ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள், புரோட்டீன், வைட்டமின் E மற்றும் B வைட்டமின்கள் ஆகியவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிக அதிகளவில் உதவி புரிகின்றன.

* கோகோ என்னும் கூட்டுப்பொருள் 70 சதவிகிதத்திற்கு குறையாமல் அடங்கியுள்ள டார்க் சாக்லேட் மூளைக்கு அதிக ஆரோக்கியம் தரக்கூடியது.

* பசலை, காலே, கொலார்ட் போன்ற பச்சை இலைக் காய்கறிகளிலுள்ள வைட்டமின் K, ஃபொலேட், லூடீன் போன்ற ஊட்டச் சத்துக்கள் மூளைக்கு ஆரோக்கியம் சேர்க்கக் கூடியவை.

* க்ரீன் டீயில் உள்ள L-தியானைன் மற்றும் அமினோ ஆசிட் போன்றவை சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்வு அளித்து அதன் கூர்நோக்கு சக்தியை அதிகரிக்க உதவி புரிகின்றன. காஃபின் விழிப்புணர்வு பெற உதவுகிறது.

* ஸ்ட்ரா பெரி மற்றும் ராஸ்பெரி போன்ற பெரி வகைப் பழங்கள் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. அவை மூளையின் அறிவாற்றலை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தைக் காக்கவும் உதவுகின்றன.

* அவகோடாவில் உள்ள நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் E ஆகியவை மூளையின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கவும், வயதாவதால் உண்டாகும் மறதி நோயைத் தடுக்கவும் உதவுகின்றன.

மேலே கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT