Are there so many benefits of drinking cumin water on an empty stomach? https://news.lankasri.com
ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

கவிதா பாலாஜிகணேஷ்

மையலறை அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் சீரகத்தில் உடலை சீராக்கவல்ல எத்தனையோ ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கின்றன என்பது நம்மில் பல பேருக்கும் தெரியாத ஒரு விஷயமாகவே உள்ளது. சீரகத்தை எப்படிப் பயன்படுத்தி என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது பல்வேறு உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது. மேலும், இது உடல் நலப் பிரச்னைகளுக்கும் இயற்கை வழித் தீர்வாகவும் அமைகிறது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, வயிற்றுக்கு மிகவும்  நல்லது. இது அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணிப் பெண்களும் சீரக நீர் பருகலாம்.  அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டுகிறது. பால் சுரப்பையும் ஊக்குவிக்கிறது.

செரிமான பிரச்னைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவுகிறது.

சீரகத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக  வைத்திருக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கிறது. சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுவதோடு,  பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். இரும்புச் சத்து குறைபாட்டை, சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் இது விளங்குகிறது. அந்த  சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில்  பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை சருமத்துக்குப் புத்துணர்ச்சி  கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்னை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம்  கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை  வலுவாக்குவதோடு. முடியின் வேர்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும் இது தடுக்கிறது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT