Avoid Eating These 5 Foods Before Exercise. 
ஆரோக்கியம்

இந்த 5 உணவுகளை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்! மீறி சாப்பிட்டா? 

கிரி கணபதி

உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான செயல்பாடாகும். ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக ஜிம்முக்கு செல்பவர்கள் எதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.‌ நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள்தான் உங்களது உடற்பயிற்சி எத்தகைய விளைவை உங்களுக்குத் தரப் போகிறது என்பதை நிர்ணயம் செய்கிறது. எனவே இந்தப் பதிவில் ஜிம்முக்கு போவதற்கு முன்பாக நாம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

1. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள்: பொதுவாகவே அதிக சர்க்கரை நிகழ்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்குக் கெடுதலாகும். குறிப்பாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரும்புபவர்கள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபராக இருந்தால், உடற்பயிற்சிக்கு முந்தைய சர்க்கரை உணவுகள் உங்கள் எடை இழப்பு இலக்கை மோசமாகிவிடும்.

2. பால் மற்றும் பால் பொருட்கள்: வொர்க் அவுட் செய்வதற்கு முன் சிலர் பாலில் நட்ஸ், வாழைப்பழம் மற்றும் பழங்களை சேர்த்து குலுக்கி சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தயிர், பால், சீஸ் போன்ற உணவுகள் உடற்பயிற்சி செய்த பிறகு சாப்பிட வேண்டிய உணவுகளாகும். பால் பொருட்கள் புரோட்டின் நிறைந்தவை என்பதால் உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களை முழுமையாக உணர வைக்க உதவும். உடற்பயிற்சிக்கு முன்பு அவற்றை சாப்பிட்டால் அது வயிற்றில் மந்த நிலையை ஏற்படுத்தி உடற்பயிற்சியின்போது குமட்டலை ஏற்படுத்தலாம். 

3. எனர்ஜி ட்ரிங்க்ஸ்: உடற்பயிற்சிக்கு முன்பு எனர்ஜி ட்ரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்கள், ஜீரோ கலோரி ட்ரிங்க்ஸ், டயட் சோடா என எதையுமே குடிக்காதீர்கள். உடற்பயிற்சியின்போது அவை உங்களுக்கு மோசமான உணர்வை ஏற்படுத்தி உடற்பயிற்சியைக் கெடுத்துவிடும். நீங்கள் நினைக்கலாம் எனர்ஜி ட்ரிங்க் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என. ஆனால் அது உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். 

4. டிரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ்: டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் புரதம் நிறைந்திருந்தாலும், அவை செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடும்போது மந்தமான உணர்வை ஏற்படுத்தலாம். எனவே முடிந்தவரை இவற்றை உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

5. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்: பொதுவாகவே உடல் எடையைக் குறைப்பதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் நார்ச்சத்து உணவுகள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கின்றன. ஆனால் இவற்றை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்வது நல்லதல்ல. நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளும் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும் என்பதால், இவற்றை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ளும்போது குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். இது உங்களது உடற்பயிற்சியின் செயல் திறனை பாதிக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT