லோங்கன் பழம்... 
ஆரோக்கியம்

இரத்த விருத்தியை அதிகரிக்கும் லோங்கன் பழத்தின் நன்மைகள்!

இந்திரா கோபாலன்

ந்தப் பழத்தை சீனாவில் Dragan eye என்பார்கள். இது லிச்சி தொடர்பான ஒரு பழமாகும். வட்டவடிவில் பெரிய திராட்சையைப் போன்றது. இதன் கொட்டை கருப்பு நிறத்தில் இருக்கும். 

லோங்கன்  பழத்தின்  நன்மைகள்:

இரத்தசோகை உள்ளவர்களுக்கு இது நல்லது. உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வயதானவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்குகிறது.‌

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இப்பழத்தைப் பயன்படுத்துவது நல்லது. பழத்தில் மட்டுமல்லாது இதன் இலைகளில் Bio active  பண்புகள் இருப்பதால் நரம்பு மண்டல பாதுகாப்பை ஊக்கப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. 

இப்பழத்தில் பாலிஃபினால் எனும் கெமிகல் இருப்பதால்  புற்று நோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. மார்பு  புற்று நோய், கல்லீரல்  மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. 

இப்பழத்தில் எபிடெர்சின், மற்றும் எலெக்டிக் அமிலம் இருப்பதால் உடலில் ஏற்படும் சருமம் சம்பந்தமான நோய்கள், குடல் அழற்சி போன்றவற்றைத்  தடுப்பதற்கும் உதவுகிறது. 

இதில் உள்ள பொடாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை. அதிகரிக்கிறது

காய்ச்சல், ஒவ்வாமை, மற்றும் அழற்சி நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள்  இப்பழத்தில் உள்ளன.

லிச்சி பழத்தைச் சாப்பிட்டுக் கொட்டையைத் தூக்கி எறியாதீர்கள். 

லிச்சி பழக் கொட்டையில் பல மருத்தவ குணங்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்குத் தீங்கு செய்யும் ஃப்ரீராடிகல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உள்ளது. ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் போக்குகிறது. நீரிழிவு புற்றுநோய் கார்டியோ வாஸ்குலர் நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. 

லிச்சி பழ விதைகள் நம் சருமம் மற்றும் தலைமுடிக்கு மிக நல்லது. இந்த விதையில் உள்ள மூலக்கூறுகளில் உள்ள பாலி ஃபினால்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருக்கக் செய்வதோடு சருமத்தின்  எலாஸ்டிசிடியையும் அதிகரிக்கச் செய்யும். 

இதில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு சருமத்தைப் பளபளப்பாக வைக்கச் செய்யும்.

இதில் உள்ள பொருள்கள் இதய தமனிகளைப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுக்கும். 

இது கொலஸ்டிராவைக் குறைத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.  

இந்த விதைரத்தத்தின் சர்க்கரையைக் கட்டுப் படுத்துகிறது. 

லிச்சி விதையை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து உங்கள் ஸ்மூத்திகளிலும் சாலட்களிலும் சேர்க்கலாம்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT