ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள்!

விஜி

லக அளவில் சர்க்கரை நோய் என்பது தற்போது அனைவரது வீட்டிலும் ஒருவருக்கு இருப்பது போன்று ஆகிவிட்டது. அந்த அளவிற்கு இந்த நோய் பரவியுள்ளது. ஆயுளுக்கும் மருந்து எடுத்து கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள், வாழ்க்கையில் இனிப்பையே தொடாமல் வாழ்வார்கள்.

பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அளவு இருப்பதால், ஏராளமானோருக்கு எந்த பழம் சாப்பிடுவது என்றே தெரியாது. சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்

பெரீஸ்: ஸ்ட்ராபெரி, ப்ளுபெரி, ராஸ்பெரீ, ப்ளாக் பெரி என பெரி வகை பழங்களில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். மேலும், நார்சத்துக்கள் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

ஆப்பிள்: பொதுவாகவே, ஆப்பிள் பழம் மருத்துவரை அண்ட விடாது என்று சொல்வார்கள். இந்தப் பழத்திலும் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரை அளவு குறைந்தே காணப்படுவதால் இதை சர்க்கரை நோயாளிகள் அளவாக உண்ணலாம்.

பேரிக்காய்: பேரிக்காயும் நார்ச்சத்து அதிகமுள்ள, சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழம் என்பதால் இதை எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிடுவதற்கு Crunchy ஆக இருப்பதால் நீங்கள் இதை சிற்றுண்டியாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

ப்ளம்ஸ்: ப்ளம்ஸ் பழம் சுவையானதும், சத்தானதும் கூட. இதில் அதிக வைட்டமின், மினரல் சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் சுகர் லெவல் குறைவாகவே காணப்படுகிறது.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் அது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீங்கள் அடிக்கடி ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT