Biceps Exercises That Give Good Results! 
ஆரோக்கியம்

நல்ல ரிசல்ட் கொடுக்கும் சில Biceps பயிற்சிகள்!

கிரி கணபதி

Biceps என்பது நம் கைகளில் முன் பக்கத்தில் அமைந்துள்ள இரண்டு தசைநார்கள். இவை நம் கைகளை வளைக்கவும், பொருட்களை தூக்கவும் உதவும். நல்ல வடிவத்தில் இருக்கும் பைசெப்ஸ் என்பது பலர் விரும்பும் ஒரு அமைப்பாகும். இதற்கு பலவிதமான பயிற்சிகள் உள்ளன. இந்தப் பதிவில் Biceps-ஐ வலுப்படுத்தி அதன் அளவை அதிகரிக்க உதவும் சில சிறந்த பயிற்சிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

சிறந்த Biceps பயிற்சிகள்: 

Barbell Curls

Barbell Curls: இது பைசெப்ஸ் பயிற்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று. ஒரு Barbell-ஐ எடுத்து கைகளை நேராக வைத்து, பின்னர் முழங்கைகளை வளைத்து Barbell-ஐ தோலுக்கு அருகில் கொண்டு வருவதுதான் இந்த பயிற்சி. 

Dumbbell Curls

Dumbbell Curls: இது Barbell Curls போன்றதே, ஆனால் Dumbbell-ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது Barbell Curls-ஐ விட உங்கள் பைசெப்ஸ் தசைகளை நன்றாக இயக்கக்கூடிய பயிற்சியாகும். 

Hammer curls

Hammer curls: இந்தப் பயிற்சியில், Dumbbells-ஐ ஒரு ஹேம்மர் பிடியில் பிடித்து முழங்கைகளை வளைத்து தோலுக்கு அருகில் கொண்டு வரவேண்டும். இது Biceps மற்றும் Brachioradialis தசைகளை இலக்காக வைத்து செயல்படும். 

Preacher Curls

Preacher Curls: இந்த பயிற்சியில் ஒரு பெஞ்ச் பயன்படுத்தி, Dumbbells அல்லது Barbell உபயோகித்து Curls செய்யப்படுகிறது. இது Biceps -ன் கீழ் பகுதியை இலக்காகக் கொண்டு செய்யப்படும் பயிற்சி. 

Concentration Curls

Concentration Curls: இந்த பயிற்சியில் ஒரு Dumbbell-ஐ எடுத்து ஒரு கையை உடலில் ஒரு பக்கத்தில் வைத்து, மற்ற கையால் Dumbbell-ஐ முழங்கை வரை வளைத்து தோலுக்கு அருகில் கொண்டு வருவதாகும். இது Biceps-ன் உள்பகுதியை இலக்காகக் கொண்டு செய்யப்படும் பயிற்சி. 

Biceps பயிற்சிகள் நம் கைகளின் தோற்றம் மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும். மேலே குறிப்பிட்ட பயிற்சிகளை சரியான முறையில் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் பைசெப்ஸை விரைவாக வளர்ந்து, நல்ல ரிசல்ட்டை அடையலாம். இருப்பினும் எந்த ஒரு உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன்பும், உங்களது ட்ரெயினரை அணுகி ஆலோசித்த பின் தொடங்குவது நல்லது. 

இத்துடன் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் மட்டுமே நீங்கள் விரும்பும் படி உங்களது Biceps-ஐ பெரிதாக வளர்க்க முடியும். எனவே, புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT