கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், கருப்பு விதை எண்ணெய் அல்லது நைஜெல்லா சாடிவா எண்ணெய் என அழைக்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பதிவில் கருஞ்சீரக எண்ணையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள்: கருஞ்சீரக எண்ணெயில் தைமோகுவினோன் எனப்படும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட ரசாயனம் உள்ளது. இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவி, முடக்கு வாதம், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
2. ஆக்சிஜனேற்ற செயல்பாடு: இந்த எண்ணெயில் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், ஃப்ரீ ரேடிக்கள் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. நாள்பட்ட நோய்களை தடுப்பதிலும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
3. தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: கருஞ்சீரக எண்ணெய் பெரும்பாலும் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதில் ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருந்து வறட்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் தோல் பிரச்சனைகள், சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளை குறைக்கவும் உதவும். கருஞ்சீரக எண்ணெயை உச்சந்தலையில் தடவுவதால், மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியை வலுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
4. செரிமான ஆரோக்கியம்: ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் அஜீரணத்தின் அறிகுறிகளைப் போக்கி, வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவும். குறிப்பாக IBS எனப்படும் குடல் எரிச்சல் நோயை குணமாக்கும் பண்புகள் இதற்கு உண்டு.
5. சுவாச ஆரோக்கியம்: பரம்பரமாகவே கருஞ்சீரக எண்ணெய் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற சுவாச நிலைகளின் அறிகுறிகளைப் போக்க உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சுவாசக் குழாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும் சுவாச செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
6. இதய ஆரோக்கியம்: கருஞ்சீரக எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
கருஞ்சீரக எண்ணெய் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் இதை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் புதிதாக எதையாவது உணவில் சேர்க்கும்போது ஒரு நல்ல சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.