சில வீடுகளில் இன்றும் பெரியவர்கள் கூட கத்தரிக்காயை சாப்பிட விரும்புவது இல்லை. குழந்தைகளை கேட்கவே வேண்டாம். கத்தரிக்காயை சமைத்தாலும் அதை தனியாக ஒதுக்கி விட்டு சாப்பிடுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அப்படி ஒதுக்கக்கூடிய காய் இல்லை கத்தரிக்காய். அது ஏராளமான சத்துக்களை தன்னுள்ளே அடக்கி உள்ளது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும், சளி, இருமலை குறைக்கக்கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும், உடலில் அதிகமாக சேரும் இரும்புச்சத்தினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கீழ்வாதம், பித்தம், வாத நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது.
மேலும், பசியின்மையை குணப்படுத்தவும், உடல் பலம் குறைவதையும் தடுக்கிறது. இதில் உள்ள போட்டோ நியூட்ரியன்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும், மூளை செல்களை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இது உதவுகிறது.
கத்தரிக்காய் பயன்கள்: முதல்கட்ட சிறுநீரகக் கற்களை கரைக்கும் வல்லமை பெற்றது கத்தரிக்காய். வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீழ்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காய் குறிப்பிடத்தக்கது. உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தை சமன்படுத்தும்.
நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாக சிதைந்து சத்தாக மாற கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி பயன்படுகிறது. பசியின்மை அகல்கிறது. சர்க்கரை நோயைத் தடுக்கும். உடல் பலம் குறைவது தடுக்கப்படுகிறது.
மூச்சு விடுதலில் சிரமம், சருமம் மறத்து விடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய கத்தரிக்காய்கள் உடல் வளர்ச்சிக்கு பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன அமைதியைத் தருகிறது.
கத்தரிக்காய் உடலுக்கு சூடு தரும் என்பதால் அரிப்பை உண்டு பண்ணி புண்கள் ஆற அதிக நாள் ஆகும். ஆதலால் உடம்பில் சொறி, சிரங்கு புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.