Does palm oil cause heart problems? 
ஆரோக்கியம்

பாமாயிலில் தயாரான உணவு இதயப் பிரச்னைகளை ஏற்படுத்துமா?

நான்சி மலர்

ம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தக்கூடிய பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றில் பாமாயில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான Processed foodsல் பாமாயில் கலந்துள்ளது. பாமாயிலை உட்கொள்வது உடலுக்கு நன்மையைத் தருமா? இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உயரத்தில் சிறிதாக இருக்கும் பனை மரம்தான் செம்பனை. இதிலிருந்து விளையக்கூடிய பழத்திலிருந்து வரக்கூடியதுதான் பாமாயில் ஆகும். இந்தப் பழத்தின் சதைப் பகுதியிலிருந்து பிரித்து எடுக்கக்கூடிய எண்ணெய்தான் பாமாயில். இந்தப் பழத்தின் விதையிலிருந்து பிரித்து எடுக்கக்கூடிய எண்ணெய்யை Palm kernel oil ஆகும். பாமாயிலை உணவுப் பொருட்களுக்கு அதிகமாகப் பயன்படுத்துவார்கள். Palm kernel oilஐ அழகு சாதனப் பொருட்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

பாமாயிலில் Saturated fat 50 சதவிகிதம், unsaturated fat 50 சதவிகிதம், வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. பாமாயில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் என்று சொல்லப்படுவதற்கான முக்கியமான காரணம் Saturated fat 50 சதவீதம் இருப்பதால்தான். இந்த Saturated fatஐ நாம் அதிக அளவில் உட்கொள்ளும்பொழுது அது உடலுக்குக் கெடுதலான கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும். இந்தக் கொழுப்பு அதிகமாகும்போது உடலில் உள்ள இரத்த நாளங்களில் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வருவதற்குக் காரணமாக அமைகிறது.

பாமாயிலில் மட்டும்தான் இந்த Saturated fat அதிகம் இருக்கிறதா? என்று பார்த்தால் தேங்காய் எண்ணெய்யில் 80 சதவிகிதம் Saturated fat உள்ளது, வெண்ணெய்யில் 51சதவிகிதம் இருக்கிறது, நெய்யில் 60 சதவிகிதம், நல்லெண்ணெய்யில் 14 சதவிகிதம், சன்பிளவர் ஆயிலில் 10 சதவிகிதம்  இருக்கிறது. இது போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய்யில் Saturated fat உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமாயில் விலை மலிவாக உள்ளதால் இதை அதிக இடங்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, இதை நாம் உட்கொள்வதும் அதிக அளவில் இருக்கிறது. சமையலுக்காகப் பயன்படுத்தக்கூடிய பாமாயில் Refined ஆயில் ஆகும். அதாவது பாமாயிலில் இருக்கும் நிறம், சுவை, வாசனை போன்றவற்றை நீக்கி பளபளப்பான எண்ணெய்யை பிரித்தெடுக்கும் முறையாகும். முதலில் எண்ணெய்யை Bleaching process மூலமாக அதில் இருக்கும் நிறம், கசடுகளை நீக்க வேண்டும்.

அடுத்து, deodorizing process மூலமாக அதிலிருக்கும் வாசனையை நீக்க வேண்டும். அடுத்ததாக, Neutralizing மூலமாக அதில் இருக்கும் தேவையில்லாத Free fatty acids போன்றவற்றை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யும்போது பாமாயில் Refined ஆயிலாக பளபளப்பாக மாறும். எனவே, Refined பாமாயிலில் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கக்கூடியது Fatty acids மட்டுமேயாகும். அதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை இந்த Process செய்வதால் அதிகப்படியாக நீக்கப்பட்டு விடுகிறது.

அதற்காக நாம் பாமாயிலே பயன்படுத்த வேண்டாமா? என்று கேட்டால், பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

காற்றை சுத்தம் செய்யும் ஃபெர்ன் தாவரங்கள்: சில சுவாரஸ்ய உண்மைகள்!

வயிற்றுக்குள் 'கடமுட' ஓசை அடிக்கடி கேட்கிறதா? வாழை இலையில் உணவு உண்பது உதவுமே!

இயற்கையின் சீற்றம் - காட்டுத்தீக் காரணங்கள் - கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தென்னையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா குட்டீஸ்..!

தோல்வி தரும் சவால்களை எதிர்கொள்வதே வெற்றி!

SCROLL FOR NEXT