சிறுநீரகப் பிரச்னை 
ஆரோக்கியம்

சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகளும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சிலருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும். ஆனால், கழிவறைக்குப் போனால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். சிறுநீர் கழித்த பிறகும் தன்னை அறியாமலேயே சொட்டு சொட்டாக சிறுநீரை வெளியேற்றுவார்கள். பொதுவாக, இந்தப் பிரச்னை எந்த வயதிலும் வரலாம். வயதான ஆண்களுக்கு சிறுநீர் குழாயை சுற்றியுள்ள தசைகள் பலம் இழந்து போனாலும் இந்தப் பிரச்னை தலை தூக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் கூட இந்தப் பிரச்னை தோன்றும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியை அழுத்துவதால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்னை ஏற்படும். புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்தாலோ அல்லது அப்பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருந்தாலோ இந்தப் பிரச்னை ஏற்படும். இதற்கு  சிறுநீரகவியல் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். சிலருக்கு சிறுநீரகப் பையில் கட்டிகளோ, அசாதாரண வளர்ச்சியோ இருந்தால் கூட இந்தப் பிரச்னை தலை தூக்கும்.

இதற்கான தீர்வுகள்:

* இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உடல் பருமனாவதை குறைப்பது மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. அதிக உடல் எடை காரணமாக அல்லது அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதாலும் இடுப்பு எலும்பு தசைகள் வலுவிழக்கலாம். இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள தசைகள் உறுதியாக இல்லையெனில் சிறுநீர் கசிவு பிரச்னை உண்டாகும்.

* மலச்சிக்கல் பிரச்னை காரணமாக மலம் கழிக்கும்போது சிரமப்படுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பலமிழந்து சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னையே சரி செய்யலாம்.

* தினசரி திரவ உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

* நீண்ட காலம் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது நல்லது.

* காபி, மது, புகையிலை போன்றவற்றின் காரணமாகவும்  இதுபோன்ற சிறுநீரகப் பிரச்னை ஏற்படலாம். இதற்கு மது, புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் அளவாக காபி அருந்துவதும் சரியான தீர்வாக இருக்கும்.

* தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவாகக் கூட இந்தப் பிரச்னை இருக்கலாம். இதற்கு தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

* நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற காரணங்கள் எனில் அவற்றிற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

* இடுப்பின் அடிப்பகுதியில் உள்ள தசைகளுக்கான சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிறுநீரை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

* பொதுவாகவே, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதும், தேவையான அளவு உடற்பயிற்சி, தியானம் செய்வதன் மூலம் மனப்பயிற்சி செய்வதும் நம்மை நல்வாழ்வு வாழ வைக்கும்.

நவபாஷாண முருகப்பெருமானை தெரியும்; நவபாஷாண பைரவரை தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது இரண்டாவது முறை!

சில்லி சாஸ் Vs. டொமேட்டோ சாஸ் Vs. சோயா சாஸ்: உடல் நலனுக்கு எது சிறந்தது?

சாணக்கியர் கூற்று! இந்த 8 மனதில் ஏற்று!

ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் விளைவுகள்!

SCROLL FOR NEXT