Chewing gum Vs Bubble gum Image Credits: YouTube
ஆரோக்கியம்

Chewing gum Vs Bubble gum: எது அதிக நேரம் புத்துணர்ச்சி தரும் தெரியுமா?

நான்சி மலர்

ற்போதுள்ள இளைஞர்களுக்கு சூயிங் கம் மற்றும் பப்புள் கம் மெல்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். சூயிங் கம் மெல்லுவதால் ஸ்ட்ரெஸ் குறைகிறது, புத்துணர்ச்சியைத் தருகிறது. பப்புள் கம் நீட்டிக்கக்கூடிய, நெகிழும் தன்மையைக் கொண்டது. இந்தப் பதிவில் இது இரண்டில் அதிக நேரம் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது எது என்பதைப் பற்றிக் காண்போம்.

சூயிங் கம்மை கிரேக்கர்கள் மற்றும் மாயன்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். Masticas மற்றும் Chicle போன்ற இயற்கையான செடிகளை மென்று அதன் மூலமாக சுவாசப் புத்துணர்ச்சியைப் பெற்றனர். சூயிங் கம் 1800களில் இருந்தே கடைகளில் விற்கப்படுகிறது.

சூயிங் கம்மை மெல்லும்பொழுது அதன் சுவையை மெதுவாக வெளியிடுகிறது. அதனால், அதிக நேரம் கம்மில் சுவையிருப்பதால், பொறுமையாக ரசித்து சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் பற்கள் சுத்தமாகிறது. சூயிங் கம்மை மென்று சாப்பிடுவதால், கலோரியை எரிக்க உதவுகிறது. இதை நன்றாக மெல்லுவதால் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

பப்புள் கம் 1906ம் ஆண்டு கடைகளில் விற்பனைக்கு வந்தாலுமே சரியாக பிரபலமடையவில்லை. பிறகு அதில் சில பொருட்களை மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்தபொழுது டீனேஜர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சூயிங் கம்மை ஒப்பிடுகையில் இது நன்றாக நீட்டிக்கக்கூடியது மற்றும் நெகிழும் தன்மையைக் கொண்டது. சூயிங் கம் மற்றும் பப்புள் கம்மில் உள்ள வித்தியாசம் அதில் சேர்க்கப்படும் பொருட்களேயாகும். பப்புள் கம்மில் சேர்க்கப்படும் சில பொருட்கள் அதற்கு தடித்தத் தன்மையையும், நீட்டிப்புத் தன்மையையும் கொடுக்கிறது.

பப்புள் கம் மற்றும் சூயிங் கம் இரண்டிலேயும் பிளேவர்கள் சேர்க்கப்படுகின்றன. சூயிங் கம் பெரும்பாலும் ‘மின்ட்’ பிளேவரில் வரக்கூடியது. இதுவே, பப்புள் கம் ஸ்ட்ரா பெர்ரி, ப்ளு பெர்ரி, கிரேப் என்று பல பிளேவர்களில் கிடைக்கிறது.

பப்புள் கம் அதிகமான நெகிழும் தன்மையைக் கொண்டிருக்கும். சூயிங் கம் குறைவான நெகிழும் தன்மையைக் கொண்டிருக்கும். சூயிங் கம்மை ஒப்பிடுகையில் பப்புள் கம்மில் அதிகமாக இனிப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு பப்புள் கம் சாப்பிடப் பிடிக்கும். ஏனெனில், அதிக இனிப்பு மற்றும் பப்புள் விட முடிவதாலும் ஆகும். இதுவே இளைஞர்கள் சூயிங் கம்மை அதன் சுவையின் நீட்டிப்புத் தன்மைக்காக விரும்புகிறார்கள். உடனடியாக புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சூயிங் கம்மையும், பப்புள் விட வேண்டும் என்று நினைப்பவர்கள் பப்புள் கம்மையும் பயன்படுத்தலாம்.

வரலாற்றுச் சின்னம் நாமக்கல் கோட்டை பற்றி தெரியுமா?

இது மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சா தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

'Whale fall' என்றால் என்ன தெரியுமா?

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

நம்முடைய வாழ்க்கையில் அன்பும் அரவணைப்பும் யாருக்கு தேவை?

SCROLL FOR NEXT