சாண்டரிங் https://www.thestatesman.com
ஆரோக்கியம்

சாண்டரிங் செய்வதன் 11 பயன்கள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

சாண்டரிங் என்பது ஒரு நிதானமான நடைப்பயிற்சி. மெதுவாக அவசரப்படாத கவலையற்ற மனப்பான்மையுடன் நடப்பதை குறிக்கிறது. இலக்கை நோக்கி விரைந்து செல்வதை விட, பயணத்தை ரசிப்பதும் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடப்பதும்தான் சாண்டரிங்கின் முக்கிய அம்சமாகும்.

உலக சாண்டரிங் தினம் என்பது ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த தினம் 1970களில் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மேக்கினாக் தீவில் உள்ள கிராண்ட் ஹோட்டலில் விளம்பரதாரரான WT ரபே என்பவரால் உருவாக்கப்பட்டது. உலக சாண்டரிங் தினம் மக்கள் தங்கள் அன்றாட நடைமுறைகளை அவசர அவசரமாக செய்வதற்குப் பதிலாக மெதுவாக, வாழ்க்கையை அனுபவிக்க மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களை ரசித்து அனுபவித்து பாராட்ட ஊக்குவிக்கிறது. இது நவீன சமுதாயத்தின் வேகமான வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வந்து வாழ்க்கையை அனுபவிக்க தூண்டுகிறது.

சாண்டரிங் செய்வதன் பயன்கள்:

1. இயற்கையுடனான தொடர்பு: இந்த நாள் பெரும்பாலும் மக்களை வெளியில் நேரத்தை செலவிடவும், இயற்கையுடன் மீண்டும் இணையவும், அதன் அழகைப் பாராட்டவும் ஊக்குவிக்கிறது.

2. உடல்நலப் பலன்கள்: விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்வதை விட, குறைவான தீவிரம் இருந்தாலும், சாண்டரிங் நல்ல உடல் செயல்பாடுகளை வழங்குகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நல்ல மனநிலை, அதிகரித்த உடல் செயல்பாடு மற்றும் பதற்றம் குறைதல் போன்ற ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.

3. சமூகத் தொடர்பு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடவும், நிதானமான உரையாடல்களில் ஈடுபடவும், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பிணைப்புக்கான வாய்ப்பை வழங்குகிறது.

4. பண்பாட்டு விழிப்புணர்வு: மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை அவதானித்து அறிந்து கொள்வதற்கு நேரத்தைச் செலவிடுவதால், வெவ்வேறு சூழல்களின் மூலம் கலாசாரம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தலாம்.

5. படைப்பாற்றல் அதிகரிப்பு: நிதானமாக நடப்பது படைப்பாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதைத் தூண்டுகிறது. இது புதிய யோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு வழிவகுக்கும்.

6. வேலை - வாழ்க்கை சமநிலையை ஊக்குவித்தல்: உலக சாண்டரிங் தினம் ஓய்வு நேரத்துடன் வேலையைச் சமநிலைப்படுத்த நினைவூட்டுகிறது. மேலும், நிறைவான வாழ்க்கை முறை மற்றும் குறைவான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.

7. தளர்வான மனப்பான்மை: இது ஒரு கவலையற்ற மற்றும் தொந்தரவு இல்லாத மனநிலையை வலியுறுத்துகிறது, அந்தத் தருணத்தை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கிறது.

8. மைண்ட்ஃபுல்னெஸ்: சான்டரிங் ஒருவரின் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்திருப்பதை ஊக்குவிக்கிறது. இது பெரும்பாலும் அதிக கவனம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் அனுபவத்திற்கு வழிவகுக்கும்.

9. கவனிப்பு: இந்த நடைப்பயிற்சியானது, இயற்கை, கட்டடக்கலை மற்றும் மனிதர்கள் போன்ற சுற்றுச்சூழலில் உள்ள விவரங்களை அதிக அளவில் மதிப்பிட அனுமதிக்கிறது.

10. பயணத்தின் இன்பம்: இலக்கை விட பயணத்திலேயே கவனம் செலுத்தவும், இது தளர்வு மற்றும் மகிழ்ச்சியின் உணர்வையும் ஊக்குவிக்கிறது.

11. மன அழுத்தத்தைக் குறைத்தல்: வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து மனத் தளர்வுக்கு அனுமதிப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். மனநலத்தை மேம்படுத்தவும் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.

தோனி ஐபிஎல் விளையடாவே இந்த விதி அறிமுகப்படுதத்தப்பட்டது – முகமது கைஃப்!

பொறுமை இருந்தால் எதிலும் வெற்றிதான்!

Red Velvet கேக்கில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – கர்நாடக உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!

பக்தி மற்றும் ஆன்மிகத்தை வளர்க்கும் திருப்பதி பிரம்மோத்ஸவ பெருவிழா!

விண்வெளியில் நடந்த முதல் கோடீஸ்வரர்!

SCROLL FOR NEXT