Lemon Tree https://www.planetnatural.com
ஆரோக்கியம்

விதவிதமான எலுமிச்சைகளும் வித்தியாசமான ஆரோக்கியப் பலன்களும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

றுமண எண்ணெய் தயாரிப்பிலும், சோப்பு, ஊறுகாய், பழப்பாகு என பலவிதமான தயாரிப்பிலும் பயன்படும் விதவிதமான எலுமிச்சை வகைகளையும் அவற்றின் பயன்கள் குறித்தும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. காசி பப்பேடா: காசி பப்பேடா எலுமிச்சை ஒரு காட்டு வகையாகும். இதன் பூர்வீகம் மேகாலயாவின் காசி மலைகளாகும். ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இந்த எலுமிச்சை ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக சுவை கொண்ட இந்த வகை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

2. லிஸ்பன் எலுமிச்சை:  இவை வகை எலுமிச்சை அதிக புளிப்பு சுவை கொண்ட சாறு நிறைந்தது. விட்டமின் சி சத்து நிறைந்த இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இந்தியாவில் பொதுவாக காணப்படும் இந்த வகை எலுமிச்சை அதிகம் புழக்கத்தில் உள்ளது.

3. மொசம்பி: ஸ்வீட் லைம் என அழைக்கப்படும் மொசம்பி பிரபலமான ஒரு சிட்ரஸ் பழமாகும். இனிமையான சுவை கொண்ட, வைட்டமின் சி சத்து நிறைந்த இது பழச்சாறாக அதிகம் உட்கொள்ளப்படுகிறது.

4. கோண்டோராஜ் எலுமிச்சை: ‘நறுமணத்தின் ராஜா’ என அழைக்கப்படும் இந்த எலுமிச்சையின் சாறு குறைவாகக் காணப்பட்டாலும் மிகவும் மணம் மிக்கதாக உள்ளது. மேற்கு வங்காள எலுமிச்சையான இது நீள்சதுரமானது. தடிமனான பச்சை தோலுடன் இருக்கும்.

5. கரடு முரடான எலுமிச்சை (galgal): இது பெயருக்கு ஏற்றாற்போல் கடினமான மற்றும் கரடு முரடான தோலைக் கொண்டது. ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வளரக்கூடியது. இந்த பெரிய எலுமிச்சை பழங்கள் மணம் நிறைந்ததாகவும், தனித்துவமான சுவை கொண்டதாகவும் உள்ளது. இவை பொதுவாக ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகிறது. புளிப்பு சுவை இருந்தாலும் இவற்றில் சற்று கசப்பு சுவையும் உண்டு.

6. அசாம் நிம்பு: தனித்துவமான இதன் வாசனை மற்றும் சுவைக்காக பெயர் பெற்றது. மருத்துவ குணம் நிறைந்தது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இது சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவும்.

7. ஜெனோவா எலுமிச்சை: குறைந்த புளிப்புச் சுவை கொண்ட மற்ற பாரம்பரிய எலுமிச்சையை விட சற்று பெரிய சைஸில் உள்ள இது, இத்தாலிய எலுமிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. ஊறுகாய் தயாரிக்கவும், சமையலிலும் அதிகம் பயன்படுகிறது.

8. நேபாளி எலுமிச்சை:  இவை நீள் வட்ட வடிவில் உள்ள ஒருவகை எலுமிச்சம் பழம் ஆகும். இதன் தனித்துவமான சுவை அனைவராலும் விரும்பப்படுகிறது. சமையல் உணவுகளில் பயன்படுத்தப்படும் இவை நறுமணம் மிக்கது.

9. போனி பிரேய்: நீளமான, மென்மையான, மெல்லிய தோல் மற்றும் விதையற்ற இது ஓரினமாகும். இவை பெரும்பாலும் கலிபோர்னியாவின் சான் டியாகோ மாவட்டத்தில் வளர்கிறது.

10. யுரேகா எலுமிச்சை: ஆண்டு முழுவதும் பழங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இது. இளம் சிவப்பு சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் வெளிப்புற தோல் கொண்டதாக இந்த யுரேகா எலுமிச்சை காணப்படுகிறது.

11. மெயர்: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுடன் குறுக்கு கலப்பின சேர்க்கையால் தோன்றிய பழமிது. யுரேகா எலுமிச்சையை காட்டிலும் மெல்லிய தோலும் சிறிது அமிலத்தன்மையும் குறைவாக உள்ளது.

12. பொன் டெரோரசா: இவை தடித்த தோலுடன் பெரிய அளவில் காணப்படும் ஒரு சிட்ரான் எலுமிச்சை கலப்பினமாகும். ‘யென் பென்’ என்பது ஆஸ்திரேலிய பழங்குடியினரால் சாகுபடி செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை வகையாகும்.

13. சிட்ரஸ் ஆரேன்சியம்: சிட்ரஸ் ஆரேன்சியம் எனப்படும் நார்த்தங்காய், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்றவையும் சிட்ரஸ் வகை தாவரங்களாகும். இவை ஊறுகாய், மிட்டாய், பழப்பாகு, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றது. சோப்பு தயாரிப்பிலும், நறுமண எண்ணெய் தயாரிப்பிலும் பயன்படுகிறது. வாதம், முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறது.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT