வெள்ளரிக்காய் வகைகள் 
ஆரோக்கியம்

வெள்ளரியின் வெவ்வேறு வகைகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்!

ஜெயகாந்தி மகாதேவன்

பொதுவாக, பச்சைக் காய்கறிகளில் வெள்ளரிக்காய் அதிக ஊட்டச் சத்துக்களும் நீர்ச்சத்தும் நிரம்பியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அதன் விலையும் பாக்கெட் ஃபிரண்ட்லியாய் இருப்பது கூடுதல் நன்மை. அடிக்கடி வெள்ளரிக்காயை சாலட்களிலும் பச்சடியிலும் சேர்த்து சாப்பிட்டு போரடிக்கிறதா? இதோ, வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த வேறு இரண்டு வகை காய்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

கீரா (Kheera) எனப்படும் சாதாரண வெள்ளரியைத் தவிர்த்து, மெட்ராஸ் கக்ரி (Madras Cucumber) மற்றும் கத்வி கக்ரி (Snake Cucumber) என மேலும் இரண்டு வகை வெள்ளரிக் காய்கள் உள்ளன. இந்த இரண்டு வகை காய்களுமே ஊட்டச் சத்துக்கள் அளிப்பதில் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல!

கீரா எனப்படுவது அடர் பச்சை நிறத்தில் உறுதியான உருவம் கொண்டது. மெட்ராஸ் கக்ரி மஞ்சள் நிறம் கொண்டது. பொதுவாக, இது சமைத்து உண்ணப்படுவது. கத்வி கக்ரி இளம் பச்சை நிறமும் அளவில் நீண்டும் உள்ளது.

கீரா வெள்ளரியில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும், இதில் வைட்டமின் K, C, பொட்டாசியம், மக்னீசியம், பீட்டா கரோட்டீன், ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் சிலிக்கா போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை வீக்கங்களைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. கீராவில் கலோரி அளவு குறைவாக உள்ளதால் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த விரும்புவோருக்கு ஏற்ற காய் இது.

மெட்ராஸ் கக்ரியில் நார்ச்சத்து, வைட்டமின் C, B, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியம் காக்கவும், இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகின்றன.

கத்வி கக்ரியில் மக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் C, B, A, கால்சியம் மற்றும் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களிலிருந்து செல்களைக் காக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை அதிகம் உள்ளன. இவை செரிமானம் சிறப்பாக நடைபெறவும் எடை பராமரிப்பிற்கும் உதவி புரிகின்றன.

தனி நபர் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப, செரிமானம் மற்றும் எடை குறைப்பிற்கு கத்வி கக்ரியையும், நார் த்தும் கண் ஆரோக்கியமும் பெற மெட்ராஸ் கக்ரியையும், நீரேற்றம் பெற கீராவையும் உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT