ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடாதீங்க!

ஜெ.ராகவன்

வாழைப்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். சிலர், விலை அதிகமான பழங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விலை மலிவான வாழைப்பழத்துக்குக் கொடுப்பதில்லை.

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இது பசியைத் தணிப்பதோடு, உடல் கொழுப்பையும் குறைக்கிறது. ஆனால், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அது சிக்கலை உருவாக்கும்.

வாழைப்பழம் உடலுக்குச் சக்தியைத் தரும். அதனால் காலையில் வேலைக்குச் செல்பவர்கள் சிலர் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், ‘வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் நிறைய உள்ளன. ஆனால், வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது என்பதால், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். மேலும் இதயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்துக்கு பசியை அடக்கும் தன்மை உள்ளது என்பதால், வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் அரிசி உணவை தவிர்த்துவிட்டு, வாழைப்பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பசி அடங்கிவிடும் என  நினைத்து அதிக பழங்களைச் சாப்பிடுகிறார்கள். இது மிகப்பெரும் தவறு. இதனால் ஜீரணக் கோளாறுகளும் மலைச்சிக்கலும் உருவாகலாம்.

மேலும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், நீரிழிவு நோயாளிகளும் வாழைப்பழத்தை எப்போதாவது சாப்பிடலாம். அதிகம் சாப்பிட்டால் இது அந்த நோயை இன்னும் அதிகரிக்கச் செய்துவிடும்.

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

SCROLL FOR NEXT